(துசாந்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிதேசத்தில் அமைந்துள் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை ஒன்று நேற்று வியாழக்கிழமை (30) நடைபெற்றது.
பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா-வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கெவுளியாமடு கிராமத்தில் அமைந்துள்ள கிரம சேவகர் அலுவலகத்தில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.
இந்த நடமாடும் சேவையின்போது பிரதேச செயலகத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை கிராம மக்கள் அதே இடத்தில பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இடம்பெற்றதாக மேற்படி பிரதேச செயலக நிர்வாகம் தெரிவித்தது.
இதன்போது சமூகசேவைப்பிரிவு, ஆட்பதிவுத் திணைக்களப் பிரிவு, சிறுவர் தொடர்பான சேவைகள், கலாசார அலுவல்கள் பகுதி, பெண்கள் அபிவிருத்தி, போன்ற பல சேவை இடம்பெற்தோடு. மக்களுக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப் படுகின்ற மேலதிக சேவைகள், திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு இதன்போது பிரதேச செயலக அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டன. இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நடமாடும் சேவையில் அதே இடத்தில் சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment