28 Jan 2014

நூலகத்தினை இயங்கச் செய்யுமாறு மக்கள் வேண்டுகோள்

SHARE
(கமல்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்எருவில்பற்று செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனை 110வீ பிரிவில் பாரதி வீதியில் அமைந்துள்ள வாசிகசாலையானது பல ஆண்டுகளாக பாவனைக்காக திறக்கப்படாமல் வெறுங் கட்டிடமாகவே காட்சியளித்து கொண்டு இருக்கிறது.

இவ் வாசிகசாலையானது கடந்த 2006ம் ஆண்டு  நேத்ரா நிறுவனத்தினால் வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  இக்கிராமத்தின் நூலக தேவையினை உணர்ந்து கட்டப்பட்டது. ஆனால் எட்டு வருடங்களாகியும் இது மக்கள் பாவனைக்காக திறக்கப்படாமல் இருப்பது கிராம மக்களை கவலையடைய  செய்கிறது.
இவ்விடயம் சார்பாக  கிராமத்தின்  சமுகசேவை அமைப்புக்கள்  பல பிரதேசசபை அதிகாரிகளுக்கும் அறிவித்தும் எந்தவித பலனும் கிட்டவில்லை. வாசிகசாலைக்கு என ஒதுக்கப்பட்ட கட்டிடமும் ஒரு சில தளபாடங்கள் மட்டுமே காணப்படுகிறது. என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: