18 Jan 2014

மட்.சிவானந்தா தேசிய பாடசாலையில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு கடந்த 16.01.2014 அன்று இடம்பெற்றது.

SHARE
(வரதன்)
மட்.சிவானந்தா தேசிய பாடசாலையில் முதலாம் வகுப்பிற்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வருகை தந்து முதலில் மட்.கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் உள்ள இராமகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையில் கலந்துகொண்டு மிசன் சுவாமி சதுர்புஜானந்தஜீ அவர்களிடம் ஆசி பெற்றனர். இதன் பின்பு சிவானந்தா வித்தியாலயத்தில் உள்ள சரஸ்வதி ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் வழிபாட்டிலும் கலந்துகொண்டு வழிபட்டதன் பிற்பாடு நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்கு சென்று மிகவும் கோலாகலமான முறையில் வரவேற்கப்பட்டனர்.

வித்தியாலய அதிபர் மனோராஜ் தலாமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்.கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சதுர்புஜானந்தஜீ மற்றும் வித்தியாலயத்தின் சரஸ்வதி ஆலய பூசகர் ஆகியோர் ஆத்மீக அதிதியாகவும் மண்முனைவடக்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு குருகுலசிங்கம் பிரதம அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.  






SHARE

Author: verified_user

0 Comments: