17 Jan 2014

சீனாவில் 12 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இருந்த 500 கிராம் எடையுள்ள தலைமுடியை அகற்றி சீன மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

SHARE
சீனாவில் 12 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இருந்த 500 கிராம் எடையுள்ள தலைமுடியை அகற்றி சீன மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
சீனாவில் உள்ள Luoyang என்ற பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அடிக்கடி வயிற்று வலியாக துடித்து வந்தார். அதனால் அவருடைய தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். எக்ஸ்ரேயில் சிறுமியில் வயிற்றுக்குள் கொத்து கொத்தாக தலைமுடி இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருத்துவர்கள் குழு அவருக்கு அறுவைசிகிச்சை செய்து தலைமுடியை அகற்றினர். மருத்துவர்கள் அகற்றிய தலைமுடியின் எடை 500 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறுவை சிகிச்சையை செய்த University of Science and Technology  மருத்துவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "சிறுமியின் வயிற்றுக்குள் தலைமுடி ஒன்றுசேர்ந்து ஒரு சிறிய வயிறு போலவே இருந்ததாகவும், அந்த முடியை அகற்ற மருத்துவர்கள் குழு மிகுந்த சிரமப்பட்டதாகவும் கூறினார்.
தன்னுடைய மகள் அடிக்கடி தலைமுடியை வாயில் வைத்திருப்பதை பார்த்திருப்பதாகவும், விளையாட்டுக்காகத்தான் அவர் அப்படி செய்வதாக நினைத்ததாக சிறுமியின் தாயார் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: