(பிரணி)
உலக செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவுத்தலைவர் வி.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொலிசார் , இரணுவத்தினர் , பிரதேச செயலக , பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் , இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் என பலர் இரத்த தானம் வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த சேமிப்பு குறைவடைவதனால் இதுபோன்ற இரத்த நன்கொடையாளர்கள் வழங்கும் இரத்தம் ஏழைகளின் உயிர் காக்க உறுதுணையாக அமைகின்றது. என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இன்று நடைபெற்ற இரத்ததான நிகழ்வு போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எனைய பகுதிகளிலும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தெரிவிக்கின்றது. என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

0 Comments:
Post a Comment