16 Oct 2012

மண்முனை பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைக்குரிய பிரதான போக்குவரத்து மார்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற மண்முனை ஓடத்துறைக்கு பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று செவ்வாய்க் கிழமை (16.10.2012) இடம் பெற்றது.
இந்நிகழ்வை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பிஸீல் ராஜபக்ச, மற்றும் ஜப்பானியத் துதுவர் நொபுகிரோ றோபோ ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இவ்வைபவத்தில் கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜித், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகழிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலேசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஜப்பான் நாட்டின் நன்கொடையில் எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு குறுக்காகா அமைக்கப் படவுள்ள இப்பாலத்தின் அடிக்கல் நாட்டு வைபவத்தில்
மட்டகக்ளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், பட்டிப்பளை பதில் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், உள்ளிட்ட பல அரச உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு அமைக்கப்படவுள்ள இப்பாலம் 210 மீற்றர் நீளமாகவும் 9.8 மீற்றர் அகலமாகவும் அமையவுள்ளதுடன் 195 மீற்றர் அத்துடன் 293 நீளமுள்ள இரண்டு தாம்போதிகளும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாலத்திற்காகா ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் நிதியும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் நிதியிலும் அமைபக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: