வேள்ட் வி~ன் நிறுவனம் தனது கிரான் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பல கிராமங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. (கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர் திட்டங்கள்) மேற்கொண்டுவருகிறது.
அதனடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வறிய சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் (நீர் பம்பி, துவிச்சக்கரவண்டி, மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள்) வழங்கும் வைபவம் கிரான் பிராந்திய வேள்ட் வி~ன் நிறுவன முகாமையாளர் எஸ்.பி பிரேமசந்திரன் தலைமையில் கிரான் பறங்கியாமடுவில் அமைந்துள்ள பங்காளர் நிறுவன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது வேள்ட்வி~ன் நிறுவன முகாமையாளர் எஸ்.பி பிரேமசந்திரன், மட்டக்களப்பு வடக்கு உதவி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா,வேள்ட் வி~ன் நிறுவன பொருளாதார அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ஜே.ஆர் அகிலானந்தன், சுகாதார திட்ட இணைப்பாளர் எஸ்.வென்ஜமின், திட்ட இணைப்பாளர் எஸ். ஜெயக்குமரன்,
மற்றும் பங்காளர் நிறுவன உத்தியோகத்தர்கள்,என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள்; கருத்து தெரிவிக்குகையில் வேள்ட்வி~ன் அமைப்பு இப்பகுதி மக்களின் இக்காலத்தின் தேவையினை அறிந்து மேற்கொள்ளப் பட்டுவரும் இப்பணிக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment