20 Sept 2012

அரச மொழி பெயர்பாளராக நியமனம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாங்காடு எனும் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும் செட்டிபாளையம் எனும் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சந்திரசேகரம் என்பவர் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.எல்.எ.மனாப் முன்னிலையில் ஆங்கில தமிழ் மொழிபொயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் கலைமானிப்பட்டம் பெற்ற இவர் அரச மொழிகள் திணைக்களத்தினால் பயிலுனர் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டு மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் அலுவலகத்தில் கடந்த பத்து வருடங்களுக்குமேலாக கடமை புரிந்து வந்த நிலையில்
கடந்த வருடம் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் வகுப்பு –1 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு தற்போது கொழும்பிலுள்ள இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் (எஸ்.எல்.ஐ.டி.ஏ) ஆறுமாத கால மொழிபெயர்ப்பு பயிற்சியை பெற்றுவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: