28 Dec 2023

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வான்பாகும் குளங்கள்.

SHARE

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வான்பாகும் குளங்கள்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை  வியாழக்கிழமை (28.12.2023) வெளியிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலைமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதோடு தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கிராமங்களிலுள்ள உள்வீதிளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் உள்ளுர் போக்குவரத்துக்கள் செய்வதிலும் மக்கள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பலத்த மழை பெய்து வருவதனால் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிவதோடு பிரதான பெரிய குளங்களும் வான்பாய்கின்றன. உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி ஒரு அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 14அடி 3அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி, கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி அங்குலம், கித்துள்வெகக்குளத்தின் நீர்மட்டம் 7அடி,  வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 2 அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 9அங்குலம், நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 31அடியும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம்17அடி 3அங்குலமுமாக உயர்ந்துள்ள இந்நிலையில் குளங்களின் மேலதிக நிர் வெளியேற்றப்படுவதாகவும், அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.6 மில்லி மீற்றர் மலை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.

எனினும் நவகிரிக் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள தாழ்நிங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.







 

SHARE

Author: verified_user

0 Comments: