10 Dec 2023

மட்டக்களப்புக்கு பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வரும் ஜனாதிபதி புதிய திட்டங்களை முன்வைக்கும் முன்வைக்க வேண்டும் – முன்னாள் பிரதியமைச்சர்.

SHARE

மட்டக்களப்புக்கு பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வரும் ஜனாதிபதி புதிய திட்டங்களை முன்வைக்கும் முன்வைக்க வேண்டும்முன்னாள் பிரதியமைச்சர்.

மட்டக்களப்பு களுதாவளைப் சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி புதிய திட்டங்களை முன்வைக்கும் பட்சத்தில் அது தமிழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வெறுமனே பொங்கலை வைத்துவிட்டுப் போவதனால் எதுவித பிரயோசனமும் அடையப்போவதுமில்லை. என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்தார். இவ்விடையம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் அரசியல் பொதிகளாக கடந்த காலங்களில் நான்கு தடவைகள் பிரேரிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் ஒஸ்லோ பிரகடனம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் காலத்தில் 2000 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பிராந்திய அபிவிருத்திச் சபைகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் முன்மொழிவுகள், இவற்றிற்கு மேலத்திகமாக ஆரம்பத்தில் மங்கள முனசிங்கவின் காலத்தில் முன்மொழியப்பட்ட சமஸ்ட்டியோடு இணைந்த தீர்வுப் பொதியும் இதுவரை காலமும் இலங்கையின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வுகளாக முன்மொழியப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசியலமைப்பு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமித்த அரசியல் நிருணயக்குழு தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய 13 வது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற் சென்று பூரண அதிகாரப் பரவலாக்கலை முன்வைத்திருந்தது. அது தொடர்பிரான குழுக்களும் நியமிக்கப்பட்டு தீர்வுகளும் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளன.

இவைகளனைத்தும் இவ்வாறு அமைகின்ற போதிலும் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி புதிய அரசியலமைப்புக் குழுவொன்றை அமைக்கவிருப்பதானது ஓர் கண்துடைப்பு வேலையாகும். இது காலத்தை இழுத்தடிக்கும் வேலையாகும். 13வது சரத்திலுள்ள விடையங்கள் பொலிஸ், காணி அதிகாரங்கள், மற்றும் மாகாண  முதலமைச்சர்களுக்கு பல்கலைக்கழகங்களை நிறுவுகின்ற அதிகாரம், உள்ளிட்டவற்றை வழங்கினால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளளார்.

இவ்வாறான அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும் என்பதை 13 திருத்தச் சட்டத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதீட்டுக்குப் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்ற. இது இவ்வாறு இருக்க பொங்கல் விழாவிற்காக மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனாதிபதி அவர்கள் வரவுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் .மேகன் தெரிவித்துள்ளார்.

எனவே மட்டக்களப்பு களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு வரும் ஜனாதிபதி அங்குவைத்து புதிய திட்டங்களை முன்வைக்கும் பட்டசத்தில் அது தமிழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வெறுமனே பொங்கலை வைத்துவிட்டுப் போவதனால் எதுவித பிரயோசமமம் அடையப்போவதுமில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: