12 Dec 2023

6இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். 1000இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் - முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன்.

SHARE

இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். 1000 இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் - முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன்.

இந்த நாட்டிலே இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். சுமார் 1000 இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த இருவருடங்களாக நிலவுகின்ற முறையற்ற பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விநாயகபுரம் மின்னொளி  விளையாட்டுக்கழகத்தின் 45 ஆவது வருட நிறைவை முன்னிட்டு மின்னொளியிலான இரவு நேர கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு (10.12.2023) இடம்பெற்றது. இதில் இறுதி கிரிக்கெட் போட்டியில் பொத்துவில்பிறி லயன்ஸ்அணியும்உதைபந்தாட்ட போட்டியில் திருக்கோவில்குட்நிக்;” அணியும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தன.

விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் கழகத்தின்; தலைவர் .அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் அக்கரைப்பற்று இலங்கை வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர் ஜெயச்சந்திரன் பொத்துவில் இலங்கை வங்கி முகாமையாளர் வை.யோகநேசன் ஏறாவூர் ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் எம்.முரளீஸ்வரன் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்மகுமார மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி கிண்ணங்களையும், காசோலைகளையும் வழங்கி வைத்ததுடன் புலமை பிரிசில் மற்றும் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களையும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

இதன்போது 44 கழகங்கள் பங்குபற்றி விலகல் அடிப்படையிலான 8 வீரர்களை கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் பொத்துவில் பிறி லயன்ஸ்  அணியும்அக்கரைப்பற்று லீ ஸ்டார் அணியும் மோதிக் கொண்டன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பிறி லயன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய லீ ஸ்டார் அணி 06 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு 37 எனும் இலக்கை கொடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறி லயன்ஸ் 5.5 ஓவர்கள் நிறைவினில் ஆறு விக்கட்டினை மாத்திரம் இழந்து 37 ஓட்டங்களை  பெற்று வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 30 கழகங்கள் கலந்து கொண்ட உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு தெரிவான விநாயகபுரம் மின்னொளி மற்றும் திருக்கோவில் குட்நிக் அணிகள் சுவாரசியமான போட்டி ஒன்றை ரசிகர்களுக்கு வழங்கினர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதி வரை இரு அணிகளும் கோல் போட தவறியிருந்தன.

இறுதியாக தண்டனை உதைமூலம் வெற்றி வாய்ப்பினை வழங்க நடுவர் முடிவு செய்ய 3இற்கு 4 எனும் அடிப்படையில் திருக்கோவில் குட்நிக் அணி வெற்றி பெற்றது.

அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்; மாவட்டங்களை சேர்ந்த அணிகள் போட்டித் தொடர்களில் பங்கேற்றதுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கும் வீரர்களுக்கும் பெறுமதியான வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இதன்போது உரையாற்றுகையில் சிறந்த முறையில் 45 வருடங்களாக விளையாட்டுத்துறை மாத்திரமன்றி கல்வித்துறைக்கும் மின்னொளி விளையாட்டுக்கழகம் அளப்பரிய பங்காற்றி வருகின்றது.

இந்த நாட்டிலே இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். சுமார் 1000 இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த இருவருடங்களாக நிலவுகின்ற முறையற்ற பொருளாதார கொள்கையே இதற்கு காரணம்.

இந்நிலையில் எமது கையில் உள்ள ஓரே ஆயுதம் கல்வியாகும். போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் கல்வி என்கின்ற ஆயுதமே எம்மை பலப்படுத்தும் என அவர் இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: