மட்டக்களப்பு மன்றேசாவில் கண்ணீர் மல்க நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வு.
இலங்கையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பீடித்திருந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் முடிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த இறுதி யுத்தத்தில் லெட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தததோடு, அவர்களது மிகவும் பெறுமதிவாய்ந்த உடமைகளும் அழிக்கப்பட்டன.
இவ்வாறு உயிரிழந்த மக்களின் 14 வது ஆண்டு நினைவஞ்சலி வணக்க நிகழ்வொன்று மட்டக்களப்பு மன்றேசா தியான வளாகத்தில் வியாழக்கிழமை(18.05.2023) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம், மற்றும், கிறிஸ்த்தவ மக்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்ததுடன், முள்ளி வாய்க்காலில் அப்போது மக்கள் தம்மிடமிருந்த அரிசியை கஞ்சி காய்சி சிரட்டைகளிலே அருந்தியது போன்று தாதும் 14 வருடங்கள் கழிந்தாலும் அந்த வலியை அனுபவிப்பதற்காக இதன்போதும் உப்புக் கஞ்சி காய்ச்சி சிரட்டைகளில் அனைவரும் பகிர்ந்து உண்டனர்.
இதன்போது கலந்து கொண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்திதோடு, தமது ஆதங்கங்களையும் தெரிவித்தனர்.
இதன்போது இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டு இறந்த உயிர்களுக்காக இறைபிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment