5 Mar 2023

சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏழாவது மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டம்.

SHARE

சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏழாவது மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டம்.சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏழாவது மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டம் கோவில்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின்  நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டமகிழ்ச்சிகர மாணவர் பயணம்எனும் திட்டத்தின் ஏழாவது  பாடசாலைத் திட்டம் மட்.கோவில்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் பி.திவாகரன் தலைமையில் சனிக்கிழமை(04.02.2023) இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் முகமாக மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் 2001 ஆம் ஆண்டு .பொ. உயர்தரம் படித்த மாணவர்களின் மாதாந்தச் செயற்பாடாக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி திட்டமானது 2000ஆம் ஆண்டு .பொ. உயர்தரம் கற்ற மாணவர்களும் இணைந்த சிவானந்த கல்வி மேம்பாட்டுப் பேரவை எனும் அமைப்பின் பெயரில் பரிணமித்துச் செயற்பட்டு வருகிறது.

ஆதனடிப்படையில் இம்மாதத்திற்கான திட்டத்தில் மட்.கோவில்குளம் விநாயகர் வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சுமார் 26 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.

2001 ஆம் சிவானந்தா தேசிய பாடசாலையில் .பொ. உயர்தரத்தில் கல்வி பயின்ற இலங்கை வாழ் நண்பர்கள் மற்றும்  அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிறேமானந்தன் ஆகியோரின் நிதி அனுசரணையில. இது இடம்பெற்றது.

கிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தினை   பேரவையின் உறுப்பினரான  கு.புவதாஸின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவை உறுப்பினர்களான கலாநிதி து.பிரதீபன் , கலாநிதி .விவானந்தராசா ஆகியோர் மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் நோக்கம் மற்றும் சமகாலத்தில் மாணவர்கள் மத்தியில்  நிலவுகின்ற பிரச்சினைகள், அவற்றை முகம்கொடுக்கும் நுட்பங்கள், பெற்றோர்களுக்கிருக்கின்ற சவால்கள், அவற்றை இல்லாதொழிப்பதற்கான உபாயம்  என்பவற்றை நடைமுறை உதாரணங்களைக் கொண்டு இதன்போது மாணவர்களுக்குத் தெழிவுபடுத்தினார்கள்.

பேரவை உறுப்பினர் சித்தாத்தன், கல்வியினை ஆதாரமாகக் கொண்டு மாணவர்கள் எவ்வாறு வாழ்வை வளப்படுத்தலாம் என்பதையும் வறுமையை எவ்வாறு கல்வியால் முறியடிக்கலாம் என்பதையும் பல ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு விளக்கினார்.

மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தில் சமத்துவம், சகோதரத்துவம் என்பனவற்றின் முக்கியத்துவம்  மற்றும்  ஏற்றத்தாழ்வில்லா மாணவர் மகிழ்ச்சிச் சூழலை உருவாக்குதல்  பற்றி பல ஆக்கபூர்வமான  கருத்தியல்களைத் தாங்கிய உரையினை  பேரவை உறுப்பினரான கி.பத்மநாதன்  பயிற்சிகளுடன் விளக்கியிருந்தார்.

ஆங்கில ஆசிரியரும் பேரவையின் உறுப்பினருமான .விமல் தொலைபேசி பாவனை மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மாணவர்களுக்கு விளக்கியதோடு பல கல்வி மேம்பாட்டுக் கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

இதன்போது பாடசாலை அதிபர்,  ஆசிரியர்கள், பேரவை அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: