3 Mar 2023

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிதி) இலங்கை கணக்காளர் சேவை விசேட தரத்தைச் சேர்ந்த எஸ்.நேசராஜா நியமனம்.

SHARE

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிதி) இலங்கை கணக்காளர் சேவை விசேட தரத்தைச் சேர்ந்த எஸ்.நேசராஜா நியமனம்.

இலங்கை கணக்காளர் சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த எஸ்.நேசராஜா வியாழக்கிழமை (02.03.2023) கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக(நிதி) கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி அனுராதா ஜயகம்பத்தால் நியமிக்கப்பட்டுளார். இதற்கான நியமனக் கடிதம் ஆளுனரால் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.  

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக(நிதி) நியமனம் பெற்ற எஸ்.நேசராஜா வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண திறைசேரியில் கடமைகளைப் பெறுப்பேற்றுள்ளார். 

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக(நிதி) கடமையாற்றிய, இலங்கை கணக்காளர் சேவை விசேடதரத்தைச் சேர்ந்த எஸ்.குலதீபன் ஓய்வு பெற்றதையடுத்து எஸ்.நேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கணக்காளர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த எஸ்.நேசராஜா 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம்திகதி இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செலயகத்தில் கணக்காளராக நியமனம் பெற்றார்.

1994ஆம்ஆண்டு செப்ரம்பர் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று பிரதேச செயலகக் கணக்காளராக 8 ஆண்டுகள் கடமையாற்றினார். பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளராக 2000ஆம் ஆண்டு மே மாதத்தில் பதவியேற்றார். புpன்னர் 2011ஆம் ஆண்டுமுதல் பிரதம கணக்காளராக பதவியுயர்வு பெற்று 2018ஆம் ஆண்டு வரை அங்கு கடமையாற்றினார்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொழும்பு தேசிய மிருகக்காட்சிச் சாலையின் பிரதம கணக்காளராக நியமனம்பெற்று 4வருடங்கள் கடமையாற்றி 2022ஆம் ஆண்டு பெப்பரவரியில் கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்று மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளராகநியமனம் பெற்றார். அத்துடன் 2022ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதல் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் பொது முகாமையாளராகவும் (பதில) கடமையாற்றி வருகிறார்.

31 வருட கணக்காளர் சேவை அனுபவம் கொண்ட  இலங்கை கணக்காளர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த எஸ்.நேசராஜா மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மகாவித்தியாலயத்தின் பழையமாணவரும் யாழ் பல்கலைக்கழகழ வியாபார மாணி பட்டதாரியுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


SHARE

Author: verified_user

0 Comments: