2 Feb 2023

கறுப்பு ஜனவரி போராட்டம்

SHARE

கறுப்பு ஜனவரி போராட்டம்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் கறுப்பு ஜனவரி போராட்டம் முன்னெடுப்பு.இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அனுஸ்டிக்கப்படும் கறுப்பு ஜனவரி தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (28.01.2023) அன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் உள்ளிட்ட உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர், மாநகர சபை உறுப்பினர்கள், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்க ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண இணைப்பாளர்

உதயரூபன் உள்ளிட்ட உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கறுப்பு ஜனவரி தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக ஊடகவியலாளர்கள் கறுப்புப் பட்டி அணிந்து அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பின்னர் காந்திப் பூங்காவில் இருந்து தனியார் பஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று மீண்டும் காந்திப்பூங்காவை வந்தடைந்து தூபியில் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





























SHARE

Author: verified_user

0 Comments: