9 Jan 2023

தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்திலே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் - சுமந்திரன் எம்.பி. - மத்திய குழுகு கூட்டத்தில் முடிவு.

SHARE

தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்திலே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் - சுமந்திரன் எம்.பி. - மத்திய குழுகு கூட்டத்தில் முடிவு.

இம் முறை உள்ளூராட்சி தேர்தலினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தொழிநுட்ப ரதியாக கையாளும் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற மூன்று கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டால் ஒரு கட்சி வட்டாரத்திலே வென்றால் மற்றயகட்சி விகிதாசாரத்திலே வெல்லும் இவ்வாறு வெற்றி பெற்றால் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடியதாக இருக்கும் இதுவே எமது உத்தி மாறாக பிரிந்து செல்வதல்ல ஆனால் தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்திலையே போட்டியிடும் ஏனைய இரண்டு கட்சிகளும் போட்டியிடும் இதுவே எனது கட்சியின் ஏகோபித்த தீர்மானம் இதன் கருத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதோ தமிழரசு கட்சி பிரிந்து தனித்து போட்டியிடுவதோ இல்லை  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போச்சாளர் சுமத்திரமன் தெரிவித்தார்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை(07)  மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இல்லத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவை 5 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரவிக்கையில்….

இம் முறை உள்ளூராட்சி தேர்தலினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தொழிநுட்ப ரதியாக கையாளும் காரணம் இத்தேர்தல் முறையிலே ஒரு கட்சிக்கு அறுதி பெரும் பான்மை கிடைப்பது மிகவும் கஸ்ரமாக உள்ள காரணத்தினாலையே இம்முறை கையாளப்படவுள்ளது. இதன் பிரகாரம் வட்டார பிரதிநிதித்துவம் மாத்திரமே கிடைக்கும் மற்றைய நாற்பது வீதத்திலே எமக்கு ஆசனங்க கிடைப்பதற்கு சந்தர்ப்பமில்லை மாறாக அதை சில கட்சிகள் சுயோட்சை குழுக்களை பாவித்து சில நூறு வாக்குகளை பெற்று ஆசனங்களை கைப்பற்றுகின்றது. இதற்காகவே இந்த முடிவினை எமது மத்திய குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம் இம்முடிவானது எமது கட்சியின் அனைத்து மாவட்ட பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாகவும் உள்ளது.

அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற மூன்று கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டால் ஒரு கட்சி வட்டாரத்திலே வென்றால் மற்றயகட்சி விகிதாசாரத்திலே வெல்லும் இவ்வாறு வெற்றி பெற்றால் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடியதாக இருக்கும் இதுவே எமது உத்தி மாறாக பிரிந்து செல்வதல்ல ஆனால் தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்திலையே போட்டியிடும் ஏனைய இரண்டு கட்சிகளும் போட்டியிடும் இதுவே எனது கட்சியின் ஏகோபித்த தீர்மானம்  வருகின்ற பத்தாம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் உள்ளது அதில் இத் தீர்மானத்தை நாங்கள் எடுத்துரைத்து இதன் சாத்தியக் கூறுகள் சம்பந்தமாக  ஒரு முடிவெடுக்கப்படும்.

இக்குறித்த விடயத்திலே ஊடகங்களுக்கு நான் ஒரு முக்கியமான விடயத்தினை குறிப்பிட விரும்புகின்றேன். இந்த தீர்மானம் தனித்து போடியிடுகின்ற தீர்மானம் இல்லை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியடப் போகின்றது என்று தயவு செய்து செய்தியை வெளிட வழிவகுக்க வேண்டாம். திரும்பவும் ஊடகங்களுக்கு சொல்கின்றேன் தமிழரசுக் கட்சி தனித்து போட்டிடப் போகின்றது என தீர்மானித்துள்ளது என தயவு செய்து எழுத வேண்டாம். அது அல்ல தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் போட்டியிடுவோம்.

 

தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்குள்ளேயே மூன்றுகட்சிகள் இருப்பதை ஒரு நன்மையான விடயமாக முன்வைக்கலாம் என்று பார்ப்போம் இல்லாவிட்டால் சுயோட்சைக் குழுக்களைவைத்து அந்த விகிதாசார ஆசனங்களை கைப்பற்ற வேண்டியிருக்கும். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் மூன்று இருக்கின்ற காரணத்தினாலையே அந்த மூன்று கட்சிகளையும் உபயோகித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அதிகூடிய ஆசனங்களை பெறலாம்  என்பது தமிழ்ரசு கட்சி அனைத்து மாவட்ட மத்திய குழு பிரதிநிதிகளின் சிந்தனையாக இருக்கின்றது.

ஆனால்  மீண்டும் மீண்டும் நான் கூறுகின்றேன் தயவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டுவிட்டது தமிழரசுக் கட்சி தனியாக பிரிந்துவிட்டது என்ற பிரச்சாரத்தினை ஊடகங்கள் செய்யாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலினை தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பாகத்தான் சந்திக்கும் ஆனால் அதில் போட்டியிடுகின்ற முறைமையிலையே நாங்கள் ஒரு தொழில்நுட்ப யுக்தியினைக் கையாண்டு தமிழரசுக் கட்சி தனியாக போட்டியிடும் போது மற்றய கட்சிகள் தனியாக போட்டியிடுகின்ற போது நாங்கள் சென்ற முறை உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கின்றபோது முகங்கொடுத்த சிக்கல்களுக்கு இம்முறை நாங்கள் முகங்கொடுக்க தேவையில்லை. சபை அமைப்பது பாதீடுகளை நிறைவேற்றுவது போன்ற சிக்கல்களிலே இருந்து விடுபட்டு  நாங்கள் மக்களுக்காக சிறந்த சேவையை முன்னெடுக்கலாம் என்பது எமது சிந்தனையாகும். இதனை மற்றய பங்காளி கட்சிகளுடன் பேசி நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.

அதற்கு அப்பால் குறுகியகாலம் இருக்கின்ற காரணத்தினாலேயே எங்களுடைய வேட்பாளர்களைத் தயார் செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வட்டாரங்களில் இருந்தும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரவுள்ளோம். ஆனால் அந்த வட்டாரத்தில் உள்ள மூலக்கிளையின் சிபார்சு மிக முக்கியமாக அமையும் எனவே மிகவும் விரைவாக இந்த வேட்பாளர்களின் தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவ்வேலைகளை நாங்கள் முன்னெடுக்க இருகின்றோம். எனவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என்பதில் ஐயமில்லை

அரசாங்கத்துடன் எந்த நிலமையிலும் எந்த ரீதியிலும் போச்சுக்குப்போக நாங்கள் தயார். அரசுடன் போச்சுக்குப் போவதற்கு நாம் பின்னடிக்கமாட்டோம் என்பதையும் நாம் உறுதி செய்துள்ளோம். அதில் ஜனாதிபதி வைத்துள்ள காலக்கெடுவிற்கும் நாம் சம்மத்தித்துள்ளோம். 10 ஆம் திகதி மீண்டும் நாம் சந்திக்க இருக்கின்றோம். எமது பேச்சு வார்த்தைகிளில் எதுவித முன்னேற்றங்களும் ஏற்பட வில்லை என்றாலும் பின்னர் அதுபற்றி நாம் சில முடிவுகளை எடுக்கப்படும்.

பேச்சு வார்தைக்கு போவதங்கு முன்னரே நாம் எமது நிலம் அபகரிக்கப்படுவதை நிறுத்தப்படல் வேண்டும், அபரிக்கப்பட்ட நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படல் வேண்டும், அரசியலமைப்பில் இருக்கின்ற அதிபாரப்பரவலாக்கல் உடனடியாக அமுல்ப்படத்தப்படல் வேண்டும், சமஸ்ட்ட அடிப்படையில் வடகிழக்கிலே அதிகாரப் பூர்வமான அதிகாரப்பகிர்வு செய்யப்படல் வேண்டும், ஆகிய முடிவுகளை தெட்டத் தெழிவாகத் தெரிவித்துள்ளோம். 

அரசியல் தீர்வுக்காக வேண்டி முன்னர் சந்திரிக்கா பண்டார நாயக்க ஒரு வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார், பின்னர் மகிந்தராஜபக்ஸவுடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் இறுதியில் அவர்களே அந்த பேச்சு வார்தையிலிருந்து விலகினார்கள். அதன்பின்னர் மைத்திரிபால மற்றும் ரணில் விக்கிரம சிங்க ஆட்சியிலே அரிசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டு 84 தடவைகள் அதன் வழிகாட்டல்குழு சந்திருக்கின்றது. அதன் மாதிரி வரைபு ஒன்றும் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டும் இருக்கின்றது. எனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இறுதியில் கைகூடாமல் இருக்கின்றது.

முன்னர் எமது பேச்சுவார்த்தைகள் தேல்வியிலே முடிந்ததாலே இனிமேல் பேச்சு வார்த்தைக்கப் போகமாட்டோம் என சொல்லப்போவதில்லை. பேச்சுவார்த்தை மூலமாகவேத்தான் தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்காக வேண்டி நாம் முழு அற்பணிப்புடன் செயற்படுவோம். இந்நிலையியில்தான் இந்த தீர்வு விடையத்திற்கு அதரவாக இருப்போன் என மகிந்த ராஜகப்ஸ அவர்கள் சம்மந்தன் ஐயா வைச் சந்தித்து தெரிவித்துள்ளார். என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: