சேவா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் மூலமாக இலங்கையின் பொருளாதார சூழலினால் கடும் பாதிப்பிற்குள்ளான கணவனையிழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு திருசெந்தூர் முருகன் ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை முழுவதிலும் 200 கிராமங்களில் இருந்து 10000 குடும்பங்களுக்கு ஒன்றறை மாத உணவுத் தேவைக்கான ரூபாய் 16000/- (பதினாராயிரம்) மதிப்பிலான 25 கிலோ அரிசி மற்றும் 25 கிலோ மாமா ஆகியன இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை, வாழைச்சேனை, கிரான், செங்கலடி, ஆரையம்பதி, கன்னங்குடா, களுதாவளை, கொக்கட்டிச்சோலை, பழுகாமம், புதூர், புளியந்தீவு, கோட்டைமுனை, ஊரணி, திராய்மடு, மாமாங்கம், கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு 26 கிலோ அரிசி மற்றும் 25 கிலோ மாமா ஆகியன வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)

.jpeg)


0 Comments:
Post a Comment