மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களிற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை.
யு.என்.டி.பி மற்றும் கிரிசலிஸ் நிறுவனங்களின் நீதி ஒதுக்கீட்டில் செங்கலடி பிரதேச செயலகத்திகுற்பட்ட பன்குடாவெளி, ஐயன்கேணி மற்றும் வாகரை பிரதேச செயலகத்திட்குற்பட்ட மதுரங்கேணிக்குளம் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாசிவன்தீவு போன்ற பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது குடிநீர் வழங்குவதில் உள்ள தடைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தியதுடன் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்ப்பதற்கும், வடிகான்கள் தூர்வாரப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் வெள்ளநீர் வடிந்தோடும்
பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கலப்பு மீன்பிடியினை ஊக்கிவிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, யு.என்.டி.பி நிறுவன அதிகாரி காண்டீபன் மற்றும் கிரிசலிஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் சமந்த மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment