19 Oct 2022

எஜமானின் பிரேதத்தில் ஏறி கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு.

SHARE

எஜமானின் பிரேதத்தில் ஏறி கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 

புன்கண்நீர் பூசல் தரும்.”

அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும். என்கிறார் திருவள்ளுவர்.

அரக குணம் கொண்டு பலர் இவ்வுலகில் வாழ்ந்தாலும், மிருகம் ஒன்று தனக்கு உணவளித்த எஜமானின் பிரேதத்தில் ஏறி கண்ணீர் விட்ட காட்சி அரக்க குணம் படைத்தவர்களையும், ஒரு கணம் மனிதம் நிறைந்தவர்களாக்கும் எனலாம்.

மட்டக்களப்பு மாவட்டம் தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் பிரேதத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதிகிரிகை நடந்த மயானத்திற்கும் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் செவ்வாய்க்கிழமை(18) அனைவரையும் கண்கலங்கவைத்துள்ளதுடன், பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாளங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 56வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் என்பவர்  காட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்து செல்லும், குரங்கு ஒன்றிற்கு தினமும் உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்கி வந்துள்ளார், எஜமான் வழங்கும் உவுகளை குறித்த குரங்கு பெற்று உண்பதுடன், தனக்குக் கிடைக்கும் திண்பண்டங்களில் எஜமனின் வீட்டில் உள்ள வலது குறைந்த பிள்ளைக்கும் அந்தக் குரங்கு வழங்கி உண்டு வந்துள்ளமை வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை(17) இரவு சுகயீனம் காரணமாக எஜமான் திடீரென உயிரிழந்துதையடுத்து அவரின் வீட்டில் இறுதிகிரிகைகள் செவ்வாய்க்கிழமை(18) செய்வதற்கு உறவினர்கள் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து கொண்டு வந்து வைத்தபோது அங்கு வந்த அக்குகுறித்த குரங்கு அவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்து அவரின் பிரேத பெட்டிக்குள் ஏறி அவருக்கு சுவாசம் உள்ளதா என சோதித்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்புவதற்கு பல முயற்சிகளை செய்துள்ளது.

ஆனாலும் அவர் படுக்கையில் இருந்து எழும்பாததையடுத்து குரங்கு கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்துள்ளது.

இந்நெகிழ்ச்சிகரமான சம்பவம் அங்கு இறுதிகிரிகையில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் மற்றும் மக்கள் மத்தியில் குரங்கின் செயலைகண்டு கண்ணீர்விட்டு அழுததுடன் குரங்கு தமது எஜமானின் அருகில் இருந்து செயற்பட்ட காட்சிகளை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

அதேவேளை சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு சென்றவேளையும், குரங்கு அங்கும் சென்று தனக்கு உணவு தந்தவர் இல்லையே  என நினைத்து, உணவு தந்தவருக்கு நன்றி உணர்வுடன் தனது அஞ்சலியை செலுத்தியுள்ள சம்மவம் அப்பகுதியில் மிகவும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்பு இரக்கம், பாசம் கொண்ட மனிதர்கள் இருந்தாலும், மனிதர்கள் மத்தியில் மனிதர்களே பொறாமை, வெகுளி, கோபம், கொண்டுள்ள இக்காலகட்டத்திலும், சிறிது காலம் அவ்வப்போது உணவளித்த தமது எஜமானுக்காக இரங்கிய குரங்கின் செயல் மிகவும் மெச்சத்தக்கதாகும்.

மிருகங்களிடமிருந்து மனிதர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என குறித்த மரணக் கிரியையில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் தமக்குள்ளே முணுமுணுத்ததையும் இதன்போது அறிய முடிந்தது.







SHARE

Author: verified_user

0 Comments: