14 Oct 2022

நட்டின் ஜனநாயக ஆட்சி எங்களை நீதிமன்றம் வரைக் கொண்டு சென்றுள்ளது – ஜனா எம்.பி.

SHARE

நட்டின் ஜனநாயக ஆட்சி எங்களை நீதிமன்றம் வரைக் கொண்டு சென்றுள்ளதுஜனா எம்.பி.

ஒரு நட்டின் ஜனநாயக ஆட்சி எங்களை நீதிமன்றம் வரைக் கொண்டு சென்றுள்ளது. எமக்கு பிடியாணை இருப்பதாக எவரும் சொல்லவில்லை. புதன்கிழமை(12) கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற விவசாய கூட்டத்திற்கு நான் சென்றபோது அங்கு வைத்துதான் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் ஒருவர் எனக்கு பிடியாணை இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பின்னர்தான் நான் அதுபற்றி விசாரித்றிந்தவேளையிலே மகிழடித்தீவு இறால்பண்ணையிலே 1987 ஆம் ஆண்டிலே தஞ்சம்புகுந்த 150 இற்கு மேற்பட்ட பொதுமக்களை அரசபடைகள் கொன்று குவித்திருந்தார்கள். அம்மக்களை நினைவுகூருவதற்காக மகிழடித்தீவில் அமைந்துள்ள நினைவுத்துபியில் அஞ்சலி செலுத்தியதற்காகத்தான் எமக்கு கொக்கட்டிச்சோலை பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தினைத்தை நினைவு கூர்ந்ததற்காக கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழங்கில் வியாழக்கிழமை(13) ஆஜராகியிருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்...

2015 இல் இருந்து 2019  வரை அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு எமக்கு உரிமை இருந்தது. 2019 இல் கோட்டபாஜ ராஜபக்கஸ அரசு இவ்வாறான நிகழ்வுகளை கடுமையாக எதிர்த்திருந்தது. அக்காலகட்டத்தில் பொதுமக்கள் நினைவுகூருவதற்குத் தயங்கிய நேரம் நாங்கள் அதனை முன்னின்று இந்தவருடம் ஜனவரிமாதம் அவர்களை நினைவு கூர்ந்திருந்தோம். ஆனால் எமக்கு நினைவுகூரக்கூடாது என எவரும் தடையுத்தரவு வழங்கப்படவில்லை. இருந்தபோதும் அப்போது கொக்கட்டிச்சோலைப் பொலிசார் எமக்கு தடைகளை ஏற்படுத்தயிருந்தனர். ஆனாலும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றிவிட்டு வந்துவிட்டோம்.

அனாலும் எமக்கு யாரும் அக்குறித்த நிகழ்வுக்கு தடையுத்தரவு வழங்கப்படவும் இல்லை மாறாக அவ்வாறு தடையுத்தரவு வழங்கப்பட்டு நாம் நீதிமன்றிற்குச் செல்லாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை, தடையுத்தரவு வழங்கப்படவும் இல்லை, நீதிமன்றிற்கு வருமாறு ஆணை பிறப்பிக்கப்படவுமில்லை, ஆனாலும் எமக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நாம் கேள்வியுற்றோம்.

இந்நிலையில் நாம் எமது சட்டத்தரணிகளுடாக மோசன் வைத்து நீதிமன்னிறில் ஆஜராகியிருந்தோம். அதற்குரிய அடுத்த தவணை எதிர்வரும் 11 ஆம் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநாட்டிலே நடப்பவைகளை இந்நாட்டு மக்கள் மாத்திரமின்றி உலகமே அறிந்து கொண்டிருக்கின்றது. .நா மனித உரிமை ஆணையகத்திலே 2012 ஆம் அண்டிலிருந்து வடகிழக்குத் தமிழர்களுக்கு நடந்த அநியாயங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மாறி மாறி பிரேரணைகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டிருக்கும் இக்காலத்தில்கூட அண்மையில் 51, ஒன்று என்ற பிரேணை இலங்கைக்கு எதிரான பிரேணையில் போர்குற்றங்களுக்கு மேலாக பொருளாதாரக் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளனஎனவே ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கின்ற நாடு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களைக் கொடுக்க வேண்டிய அரசு இறந்த மக்களை நினைவுகூர எங்களைக்கூட தண்டிக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்அவ்வாறு அவர்கள் நினைப்பது அது முடியாத காரியமாகும்நாம் தொடற்சியாக இறந்த எமது மக்களை நினைவு கூர்ந்து கொண்டே இருப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: