19 Sept 2022

வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கு பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.

SHARE

வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கு பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளியில் அப்பகுதியைச் சேர்ந்த 100 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கு மிளகாய் மற்றும் கத்தரிக் கன்றுகளும், சோளம், பயற்றை, கீரை, வெண்டி, உள்ளிட்ட விதைகளும், வீட்டுத் தோட்டம் தொடர்பிலான கையேடுகளும் சனிக்கிழமை மாலை(17) வழங்கி வைக்கப்பட்டன.

லண்டனில் அமைந்துள்ள (நம்பிக்கை ஒளி, இலண்டன்/வேல்ஸ்) றே ஓவ் ஹோப் (RAY HOP PEOPLE CHARITY LONDON & WALES ) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நாமே நமக்கு இலண்டன்/வேல்ஸ் (NAAME NAMAKKU C I C LONDON WALES) எனும் அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அப்பகுதி பொதுசுகாதர பரிசோதகர் குபேரன்,நாமே நமக்கு அமைப்பின் பிரதிநிதிகள், தொண்டர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும், இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்கும் முகமாக நாம் ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ளும் பட்சத்தில் ஓரளவுக்கேனும் நாம் உணவு நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். எனவே எவரும் வீட்டில் வீணாக பொழுதைக் கழிக்காமல் வீட்டுத் தோட்டங்களில் ஈடுபட்டு, அதிலிருந்து கிடைக்கும் விளைச்சல்களை உணவுத் தேவைக்கு எடுத்துவிட்டு மிகுதியை  விற்பனை செய்து அதனூடாகவும் சிறிய வருமானத்தையும் பெற்றுக்கொள்ள   முடியும். என இதன்போது கலந்து கொண்டிருந்த பிரதிநிதிள் தெரிவித்தனர்.

தமது தற்கால நிலமையறிந்து எமதுகிராமத்திற்கே  பயிரினங்களைக் கொண்டு வந்து தம்மை வீட்டுத் தோட்டச்செய்கையில் ஈடுபடத் தூண்டியதற்காக சம்மந்தப்பட்டஅனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதா இதன்போது அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
















 


SHARE

Author: verified_user

0 Comments: