3 Apr 2022

ஊரடங்கு அடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து திடீரென பூட்டப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையம் - முண்டியடித்த மக்கள்.

SHARE

 

ஊரடங்கு அடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து திடீரென பூட்டப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையம் - முண்டியடித்த மக்கள்.

சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் இலங்கை பூராகவும் ஊடரங்குச்சட்டம் அமுல்ப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருட்களை வினியோகித்துக் கொண்டிருந்த போது திடீரென நிறுத்தப்பட்டன. இன்னிலையில் சனிக்கிழமை(02) இரவு 6 மணியைக் கடந்த நிலையிலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டன.

எனினும் எரிபொருள் வினியோகிக்கப் படாததைத் தொடர்ந்து அப்பகுதியைச் சூழ மக்கள் மிகுந்த சிரமப்பட்டதையும், பொற்றோல், மற்றும் டீசல், மண்ணெண்ணை, இன்மையால் தாம் போக்குவரத்துச் செய்ய முடியத நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதானாலும், நாட்டில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டதனாலும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்பட் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளன என அவ்விடத்திலிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரவு 7 மணியளவில் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பத்திகாரி அபேவிக்ரம அவர்கள் எரிபொருள் நிலையத்தின் உரிமையாளருடன் கலந்துரையாடி, மீண்டும் எரிபொருட்களை மக்களுக்கு வினியோகிக்குமாறு தெரிவித்ததற்கிணங்க தொடர்ந்து எரிபொருட்கள் வழங்கப்பட்ன. எனினும் மக்கள் நீண்ட வரிசையில், பரபரப்புடன் முண்டியடித்துக் கொண்டு சென்றதையும், அவதானிக்க முடிந்தது.













SHARE

Author: verified_user

0 Comments: