14 Mar 2022

ரணில் விக்கிரம சிங்கபோன்ற தலைவர்கள் நாடு முன்னேறுவதை ஒருபோதும் விரும்பாதவர்கள். – நா.உ நிபுண் ரணவக்க.

SHARE

ரணில் விக்கிரம சிங்கபோன்ற தலைவர்கள் நாடு முன்னேறுவதை ஒருபோதும் விரும்பாதவர்கள். – நா. நிபுண் ரணவக்க.

கடந்த 5 வருடங்களூக நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு இந்த நாட்டைச் சின்னாபின்னமாக்கிய காலமாகும். அந்த பொருளாதாரப் பின்னணியில்தான் எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றது. ரணில் விக்கிரம சிங்கபோன்ற தலைவர்கள் நாடு முன்னேறுவதை ஒருபோதும் விரும்பாதவர்கள். எச்.எஸ்.பி.சி, .எம்.எவ், ஆகிய வங்கியில் கடன் பெறச் சென்றபோது அதனைத் தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண் ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதிக்கான இளைஞர் மாநாடு பெரியபோரதீவிலுள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(13) மாலை நடைபெற்றது. இதன்போது பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் .சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகளிர் அணித்தலைவி திருமதி..காந்தரூபி, மற்றும் பட்டிருப்புத் தொகுயிலுள்ள இளைஞர் யுவதிகள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண் ரணவக்க கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்

உலக நாடுகளில் இன்னும் கொவிட்- 19 இற்கு முதலாவது தடுப்பூசியைப் போடாத நாடுகளும் இருக்கின்றன. ஆனால் எமது ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் மூன்றாவது தடுப்பூசியும் போடப்பட்டு முடியும் நிலமை காணப்படுகின்றது. கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் பாசிக்குடாவில் ஒரு சுற்றுலாப் பிராயாணிகளையும் காண முடியவில்லை. தற்போது எங்கும் சுற்றுலாப் பயணிகளைப் காணமுடிகின்றது. சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்தமை தொடர்பில்; அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அனுரகுமார திசாநாயக்க அவர்களால் போடப்பட்ட ஒரு வழக்கும் உள்ளது. 3 தசாப்பதகாலமாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொண்டவர் மகிந்த ராஜபக்கஸ அர்கள். அதுபோல் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டவர் பசில் ராஜபக்ஸ அவர்கள்.

கடந்த 5வருடங்களூக நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு இந்த நாட்டைச் சின்னாபின்னமாக்கிய காலமாகும். அந்த பொருளாதாரப் பின்னணியில்தான் எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றது. ரணில் விக்கிரம சிங்கபோன்ற தலைவர்கள் நாடு முன்னேறுவதை ஒருபோதும் விரும்பாதவர்கள். எச்.எஸ்.பி.சி, .எம்.எவ், ஆகிய வங்கியில் கடன் பெறச் சென்றபோது அதனைத் தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள்.

இவ்வாறான சவால்கள் இருக்கின்ற போதிலும் சந்திரகுமார் போன்ற அமைப்பாளர்கள், கல்வி, பாதை, மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவுக்கும் 3 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பிரதே சபை உறுப்பினர் ஒருவரக்கு 4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2015இற்கு முன்னர் பாசிக்குடாவில் இருக்கின்ற மாலு மாலு கொட்டேல் பசில் ராஜபக்சவின் கொட்டடேல் என் சொல்லி வந்தார்கள். இவ்வாறு தொடர்ந்து பொய் சொல்ல முடியாது. அதுபோல் தற்போது பொய்களை சற்று வித்தியாசமான முறையில் சொல்லி வருகின்றார்கள். இவ்வாறான பொய்யர்களின் கதைகளை நாங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றோம். இதனை யாரும் தட்டிக் கேட்பதில்லை. போட் சிற்றி கட்டும்போது சிகிரியாவில் இருக்கும் கற்கள் முழுவதையும் உடைத்துக் கொண்டு போக வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். தற்போது போட்சிற்றி கட்டி திறந்தும் விடப்பட்டுள்ளது. சிகிரியா மலைகள் உடைக்கப்படவும் இல்லை இவ்வாறான பொய்யர்களின் சொல்லைக் கேட்டுக் கொண்டுதான் எமது மக்களும் உள்ளார்கள்.

நான் ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வாக்காளர்கள் ஆட்சியாளர்களுக்கு சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கவிலலை என தெரிவிக்கின்றேன். 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் 1952 ஆம் ஆண்டு தேர்தல் வருகின்றது. பின்னர் 1956ஆம் ஆண்டு மற்றய தேர்தல் வருகின்றது. மாறி மாறி ஆட்சியாளர்கள் வருகின்றார்கள். உண்மையான ஒரு நிலப்பாடான விடையங்களைக் கொண்டு வருவதற்கு, சந்தர்ப்பம் இல்லாமல் போய் விடுகின்றது. இரண்டு வருடகால பாராளுமன்றக் காலத்தை ஆட்சி செய்தவர் மகிந்த ராஜபக்ஸ அவர்கள்தான். அவரது காலத்தில் துறைமுகம், விமான நிலையங்கள், பாதைகள், போன்ற கால அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே வாக்காளர்கள் தொடர்ந்து எமது ஆட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டியுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீக்குவான் 40வருடங்கள் அந்த நாட்டை ஆட்சி செய்தார், மலேசியாவின் மகதீர் முகமது அவ்வாறே, சீனா, ரசியா, போன்ற நோடுமுகளிலும் அவ்வாறே, இவ்வாறு சென்றால் நாடு அபிவிருத்தி அடைந்து விட்ட நாடாக மாறிவிடும். எனவே தொடர்ந்து மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்  என அவர் இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: