18 Mar 2022

அம்பாறை மாவட்டத்தில் இறப்பர் செய்கையை மேலும் ஊக்குவிக்கும் திட்டத்தின் அடிப்படையில் 66 ஹெக்டேயரில் இறப்பர் பயிர்ச்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

SHARE

(அஸ்ஹர் இப்றாஹிம்)


அம்பாறை மாவட்டத்தில் இறப்பர் செய்கையை மேலும் ஊக்குவிக்கும் திட்டத்தின் அடிப்படையில் 66 ஹெக்டேயரில்   இறப்பர் பயிர்ச்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.” துரு சவிய ” திட்டத்தின் அடிப்படையில் தேயிலை மற்றும் இறப்பர் போன்ற பொருளாதார பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல் , இறப்பர் பால் பதனிடும் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துதல் மற்றும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டு செலவாணிகளை ஈட்டுதல் போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது பாரம்பரிய பயர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் நிலங்கள் தவிர்ந்த 1200 ஹெக்டேயரில் இறப்பர் பயிரிடப்பட்டுள்ளது. அம் மரங்களிலிருந்து சம்பிரதாயபுர்வமாக இறப்பர் பால் எடுக்கும் நிகழ்வும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கம்பனி தோட்டங்களை சீர்செய்தல் , தேயிலைத்தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை , தேயிலை தொழிற்சாலைளை நவீனப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தின் பங்குபற்றுதலுடன் , இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸானாயக உட்பட திணைக்கள அதிகாரிகளும் இறப்பர் பயிரச்செய்கையாளர்களும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: