22 Feb 2022

சங்கவி பிலிம்ஸ் வாழும்போதே வாழ்த்துவோம் தேசிய கலாவிபூசணம் விருது வழங்கல் விழா.

SHARE

(ரகு)

சங்கவி பிலிம்ஸ் வாழும்போதே வாழ்த்துவோம் தேசிய கலாவிபூசணம் விருது வழங்கல் விழா.

இண்டர்நெசனல் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் திரையரங்குகளின் தவிசாளர் டொக்டர்  சுரேஷ் அவர்களின் தலைமையில் கலைஞர்களை வாழும்போதே வாழ்த்துவோம் தேசிய கலாவிபூசணம் விருது வழங்கல் விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் பிரதமர் கௌரவ மகிந்தராஜபக்ஷ அவர்களின் மதவிவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசை கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவரும் சமாதான நீதவானுமாகிய  அதிவணக்கத்திற்குரிய பிதா கலாநிதி சந்ரு பெர்ணாண்டோ, அவர்கள் பங்கேற்றதோடு  கொழும்பு ஈ சொப்ட் நிறுவனத்தின் உபவேந்தர் பேராசிரியர் சந்திரசேகரன் கௌரவ அதிதியாக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்  செந்தில் வேலவர், விசேட அதிதியாகவும் பங்கேற்ற இந்நிகழ்வில்  கலைத்துறைசார்ந்த சுமார் 154 கலைஞர்கள் தேசிய கலாவிபூசணம் விருவழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கையின் பல்வேறுபகுதிகளையும் சேர்ந்த இளம் கலைஞர்கள் மூத்தகலைஞர்களென பலரும் இந்நிகழ்வில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் நினைவுப்பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் என்பன வழங்கப்பட்டு அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக பங்கேற்ற அதிவணக்கத்திற்குரிய பிதா கலாநிதி சந்ரு பெர்ணாண்டோ அவர்களால் சர்மிளாவின் இதயராகம் திரைப்படத்தின் இயக்குனருடைய காத்திரமான நூலொன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

அத்தோடு நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் செந்தூரம் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்விலே மீன்பாடும் தேனாடு மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக்கொண்டு வசித்துவருகின்ற வளர்ந்துவரும் ஊடகவியலாளர் இசைக்கலைஞர் மற்றும் குறுந்திரைப்பட நடிகருமான  சண்முநாதன் ரகுதாஸ் அவர்களும் சந்திரசேகரன் மற்றும் சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் தவிசாளர் டொக்டர்  சுரேஷ் அவர்களால் பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுபதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் மற்றும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டு தேசிய கலாவிபூசணம் விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.















SHARE

Author: verified_user

0 Comments: