14 Feb 2022

சுபீசத்தின் நோக்கு திட்டத்தின்கீழ் சமுர்த்தி பய னாளிகளுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியக் கொடுப்பனவு வழங்கும் மாவட்ட பிரதான நிகழ்வு.

SHARE

சுபீசத்தின் நோக்கு திட்டத்தின்கீழ்  சமுர்த்தி பய னாளிகளுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியக் கொடுப்பனவு வழங்கும் மாவட்ட பிரதான நிகழ்வு.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய சமுர்த்தி பயணாளிகளுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் திங்கட்கிழமை(14)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் இக் கொடுப்பனவை வழங்கி வைத்து இதனை ஆரம்பித்து வைத்தார். இதன் பிரதான வைபவம் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயணாளிகள் என பலரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இதன் போது சமுர்த்தி பயணாளிகளுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டு இந் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.சமுர்த்தி பயணாளிகள் குடும்பத்தில் 3500 ரூபா பெற்ற குடும்பத்திற்கு 4500 ரூபாவாகவும் ,2500 ரூபா பெற்ற குடும்பத்திற்கு 3200 ரூபாவாகவும், 1500 ரூபா பெற்ற குடும்பத்திற்கு 1900 ரூபாவாகவும் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.         








   

SHARE

Author: verified_user

0 Comments: