விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்புக் காரியாலயத்தினூடாக வழங்கப்பட்ட நிலக்கடலை அறுவடை நிகழ்வு திங்கட்கிழமை(14) போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் விளாந்தோட்டம் எனும் கிராமத்தில் இடம்பெற்றது.
அப்பகுதி தொழில் நுட்பவியலாளர் கே.டிசாராவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, உதவி விவசாய பணிப்பாளர் த.மேகராசா, பாலையடிவட்டை விவசாயப் போதனாசிரியர் கே.கோபி, உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
அப்பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த வருடம் விவசாயத் திணைக்களத்தின் பி.எஸ்.டி,ஜி. எனும் திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் விளைச்சல் தற்போது அறுவடை செய்யப்பட்டன. இதப்போது கலந்து கொண்டிருந்த விவசாயத்திணைக்கள அதிகாரிகளினால் விவசாயிகளுக்கு பல விளக்கங்களும் வழங்கப்பட்டதோடு, சோனப் பசளை தொடர்பான கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment