9 Oct 2025

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர் தின பிரதான நிகழ்வு.

SHARE

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான சர்வதேச முதியோர் தின பிரதான நிகழ்வு வியாழக்கிழமை (09.10.2025) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயேந்தலால் ரத்தின சேகர தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான வயதிற்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து பண பரிசல்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர்

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திசாநாயக்க கலந்து கொண்டதுடன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள், முதியவர்கள், பொதுமக்கள், என பலர் கலந்து கொண்ட நிகழ்வில் முதியவர்களின் கலை நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றன..

இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர் புதிய அரசாங்கத்தினால் சமூக சேவை திணைக்களத்திற்கு அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டு முதியவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் இங்கு கருத்து தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: