4 Jan 2022

இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

SHARE

இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவித்தல் பிரிவினால் செவ்வாய்கிழமை(04) அதிகாலை 50.30 மணிக்கு வெளியிடப்பட்ட முன்னறிவித்தல் தகவலின் அடிப்படையில் வடக்கு வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும், அவ்வப்போது மழையோ தல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். மேல், சப்ரகமூவா, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மாலை வேளையில் அல்லது இரவில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றதென வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

சேவ்வாய்கிழமை(04) காலை அவர்தெரிவித்துள்ள காலநிலை தொடர்பான தகவலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை, மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறை, காலி, மாத்தறை மற்றும், இரத்தினபுரி மாவட்டங்களில், சில இடங்களில் 75மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோ மீற்றர் வேகத்தில், பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன்கூடிய மழையின்போது தற்காலிகமாக, பலத்த காற்றும் வீசக்கூடும். இடி மின்னல் தாகங்களினால் எற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில் திருகோணமைலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் பல இடங்களில் மழையோ அல்லது அடியுடன்கூடிய மழையே பெய்யக்கூடும். கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு, அப்பாற்பட்ட கடற் பரப்புக்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டைச்சூழவுள்ள கடற் பிராந்தியங்கிளில் காற்று வடகிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25கிலோ மீற்றர் தொடக்கம் 35கிலோ மீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும். காங்கேசந்துறையிலிருந்து மன்னார் புத்தளம் ஊடாக கொழும்பு மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடான கொழும்பு வரையிலான கடற்பரப்புக்களும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புக்களும், அவ்வப்போது ஓரளவான கொந்தழிப்பாகக் காணப்படும். நாட்டைச் கூழவுள்ள ஏனை கடற்பரப்புக்கள். சில சமயங்களில் மிதமான கொந்திப்புடன் காணப்படும். இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசுவதுடன், கடல் கொந்தழிப்பாகவும் காணப்படும் என  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.              


                       

SHARE

Author: verified_user

0 Comments: