9 Dec 2021

கட்டுமுறிவு கிராமத்தில் பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு புதிய வீடு - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் ஆரம்பித்து வைப்பு.

SHARE

கட்டுமுறிவு கிராமத்தில் பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு புதிய வீடு - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் ஆரம்பித்து வைப்பு.

வாகரை பிரதேச செயலாளர் பிரி விற்குட்பட்ட கட்டு முறிவு கிராமத்தில் வருமானம் குறைந்த குடும்பம் ஒன்றுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, புதியவீடு அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்தங்கிய பிரதேசமான கட்டுமுறிவு கிராமத்தில், ரவித்திரன் கிருத்திகா எனும் 4 வயது சிறுமிக்கு பாம்புகடித்தது.  அக்கிராமத்துக்கான பாதைசீரற்ற நிலையில் காணப்பட்டமையினால் மூன்று மணித்தியாலயத்தில் பின்பே கதிரவெளி பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட, குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சிறுமியின் உயிர் இழப்பு பிரதேச மக்கள் மத்தியில் பாரிய சோகத்தை ஆழ்த்தியிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் கதிரவெளி வைத்தியசாலைக்கு விரைந்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், உயிரிழந்த சிறுமியின் உடலத்தை பார்வையிட்டதுடன், பெற்றோரையும் சந்தித்திருந்தார்.

இதன்போத தாம் வாழ்ந்து வந்த ஒலைக்குடிலாலேயே தமது பிள்ளை இறக்க நேரிட்டதாக பிள்ளையின் பெற்றோர் இராஜாங்க அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர். அதேவேளை தமது பிரதேசத்தில் இருந்து வைத்தியார் லைக்கு செல்லும் பிரதான விதி குன்றும் குளியுமாக போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை என்பது தொடர்பாகவும் தெரிவித்திருந்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் அந்த கிராமத்திற்குதேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்திற்கு செல்லும் பகுதியில் பாலம் ஒன்றினை நிறுவுவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

அந்த வாக்குறுதியின் மற்றுமொரு கட்டமாக உயிரிழந்த சிறுமியின் ஒலைக்குடிசைக்கு பதிலாக தேசிய விடமைப்பு அதிகர சபையினூடாகபுதிய வீடு அமைத்துக் கொடுப்பதற் கான வேலை திட்டம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு வீட்டிற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உயரதிகாரிகள், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் செயலாளர்கள், பிரதேச இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 








SHARE

Author: verified_user

0 Comments: