19 Dec 2021

உலக கலாசாரங்களுக்கு இடையிலான புத்தாக்க விருதினை பெற்ற இலங்கையர்.

SHARE


உலக கலாசாரங்களுக்கு இடையிலான புத்தாக்க விருதினை பெற்ற இலங்கையர்.டுபாய் எக்ஸ்போ 2020 இன் ஜேர்மன் பெவிலியனில் 2021சகிப்புத்தன்மை மற்றும் உள்ளீர்ப்பு என்னும் கருப்பொருளில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில்உலகளாவிய ரீதியில் அடிமட்ட சமூகங்களோடு (Grass root communities) செயற்படும் பத்து செயற்றிட்டங்கள்பெரும் மதிப்புடைய கலாச்சாரங்களுக்கு இடையிலான புதுமை (Intercultural Innovation) விருதுக்கான இறுதி வெற்றியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு120 நாடுகளில் இருந்து 1,100 இற்கு மேற்பட்டவிண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில்தேர்வு செயல்முறை மிகவும் போட்டித்தன்மையுடன் இருந்ததுடன்  விருது பெற்ற பத்து அமைப்புக்கள் 200,000 டொலர்  நிதி மானியத்தை பகிர்ந்து கொண்டனர்.

நிதியுதவிக்கு கூடுதலாகநாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி மற்றும் பி.எம்.டப்ளியூ குழுமத்தின் திறன்-கட்டுமானம் மற்றும் வழிகாட்டுதலின் மூலம் கலாச்சாரங்களுக்கு இடையிலான புதுமை விருதியைப் பெறுபவர்கள் அக்சென்ச்சர் ஆதரவுடன் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தவும்பிற சூழல்களுக்குப் பிரதிபலிக்கவும் உதவுவார்கள். சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இளம் தலைவர்களுக்கான திறன் மற்றும் அறிவுப் பகிர்வு தளமான கலாச்சார தலைவர்கள் வலையமைப்பில் சேரவும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

குறித்த விருதுகளில் இரண்டினை  ஆசியா கண்டத்தில் இருந்து இலங்கை மற்றும் இந்தியா பெற்றுகொண்டன. இலங்கையிலிருந்து   இளையோர் தலைமைத்துவத்தினை வலுப்படுத்தும் ஒன்றியம் (SYLC) மற்றும் ட்றீம்ஸ் பேஸ் அக்கடமியினர்  பெரு மதிப்பு உடையகலாச்சாரங்களுக்கு இடையிலான புதுமை விருதினை சர்வதேச அரங்கில் தன்னகத்தே பெற்று எமது மண்ணிற்கு பெருமை ஈட்டித்தந்துள்ளனர்.

இளையோர் தலைமைத்துவத்தினை வலுப்படுத்தும் ஒன்றியம்ட்றீம்ஸ் பேஸ் அக்கடமியின் இணை-நிறுவுனர் கிஷோத் நவரெட்ணராஜா இவ் விருதினை அமைப்பின் சார்பாக பெற்றுக்கொண்டார். அவரிடம் இது பற்றி வினவிய போது  “இலங்கையில் அடிமட்ட சமூகங்களுக்கு இடையே காணப்படும் முரண்பாட்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான இந்த  பொறிமுறைதொழினுட்பத்தின் உதவியுடன் அடிமட்ட சமூகங்களுக்கும் உரிய தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியினை நிவர்த்தி செய்து அப்பிரச்சனை தீர்வை நோக்கி நகரும் வரையில் பொறிமுறை தொழிற்படுவதன்  மூலம்   வன்முறையான முரண்பாட்டினை தவிர்ப்பதாக அமைகின்றது “ என தெரிவித்தார்.

நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி (UNAOC) மற்றும் பி.எம்.டப்ளியூ இணைந்து ஆக்சென்ச்சர் இன் ஆதரவுடன்வழங்கப்படும் கலாச்சாரங்களுக்கு இடையிலான புதுமை விருது ஆனது கலாச்சாரங்களுக்கு இடையிலான  தொடர்பாடல் மற்றும் புரிதலை ஊக்குவிப்பதோடு சமாதானம்கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பங்களிக்கும் அடிமட்ட சமூகங்களோடு செயற்படும் முயற்சிகளை ஆதரிக்கிறது. 

விருதுகள் வழங்கும் விழாவில் நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணியின் உயர் பிரதிநிதியும் ஸ்பெயினின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான எச்.இ.மிகுவல் ஏஞ்சல் மொரடினோஸ் மற்றும் பி.எம்.டப்ளியூ குழுமத்தில் மனித வளங்களுக்குப் பொறுப்பான பி.எம்.டப்ளியூ குரூப் இன் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி இகா ஹோர்ஸ்ட்மேயர்இந்த விழாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநில அமைச்சர்எக்ஸ்போ 2020 துபாய் பீரோவின் நிர்வாக இயக்குநர் மற்றும் துபாய் எக்ஸ்போ 2020 இன் உயர் குழுவின் உறுப்பினரான மேதகு ரீம் இப்ராஹிம் அல் ஹாஷிமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கலாச்சாரங்களுக்கு இடையிலான புதுமை விருது (IIA) தனது 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில்நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி (UNAOC) மற்றும் பி.எம்.டப்ளியூ குழுமம் ஆகியவை பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் கொண்ட சமூகங்களை வளர்க்கும் அடிமட்ட சமூகங்களோடு வேலை செய்யும் முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் சரவதேச சமூகத்தை மேம்படுத்த தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன. ” என்று மொரடினோஸ் தனது தொடக்க உரையின் போது கூறினார்.

கலாச்சாரங்களுக்கு இடையிலான புதுமை விருது மற்றும் பி.எம்.டப்ளியூ குழுமத்துடனான எங்கள் இணைதலின் மூலம்புதுமையான வழிகளில் இந்த பிரச்சனைகளை தீர்க்கும் திட்டங்களை நாங்கள் வலுப்படுதுகின்றோம். நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி மற்றும் தனியார் துறைக்கு இடையே எப்போதும் வளர்ந்து வரும் இந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை முன்னிட்டு நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். இது உலகெங்கிலும் உள்ள சமூக கண்டுபிடிப்பாளர்களின் வேலையைப் பெருக்கி வலுப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் தொலைநோக்கு சிந்தனையும்தான் நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி -பி.எம்.டப்ளியூ குழுமத்திற்கு இத்தகைய மதிப்பையும் தாக்கத்தையும் கொடுத்துள்ளது.




கலாச்சாரங்களுக்கு இடையிலான புதுமை விருதானது  பன்முகத்தன்மைசகிப்புத்தன்மை மற்றும் குறிப்பாக ஆக்கப்பூர்வமான வழியில் சேர்ப்பதை ஊக்குவிக்கும் நபர்களையும் திட்டங்களையும் கெளரவிக்கிறது. ஒரு சமூகமாகவும்ஒரு நிறுவனமாகவும் நம்மை முன்னோக்கி நகர்த்தும் மதிப்புகள் இவை. முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைப்பு தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் - பிஎம்டப்ளியூ குழுமம் இதைத்தான் குறிக்கிறது. நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி உடன் இணைந்துமதிப்பு வாய்ந்த உரையாடலுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்கிறோம்” என்று  பிஎம்டப்ளியூ குழுமத்தில் மனித வளங்களுக்குப் பொறுப்பான  நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி இகா ஹோர்ஸ்ட்மேயர் கூறினார்.

 

எமது நாட்டின் அடிமட்ட சமூகங்களுக்கு இடையே காணப்படும் முரண்பாட்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக  இளைய தலைமுறையினரை  இளையோர் தலைமைத்துவத்தினை வலுப்படுத்தும் ஒன்றியம்  மற்றும் ட்றீம்ஸ் ஸ்பேஸ்யினர் டிஜிற்றல் வித்துரைப்பாளர்கள் வலையமைப்பு செயல்திட்டத்தில்  இணைய அழைக்கின்றனர். இணைய விரும்புபவர்கள் www.sylcsl.org என்னும் இணைய தளத்திற்கு செல்வதன்மூலம் இணைந்து கொள்ளலாம்.

SHARE

Author: verified_user

0 Comments: