27 Dec 2021

நூல் வெளியீடும், மூத்த கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்.

SHARE

(ரகு)

நூல் வெளியீடும்மூத்த கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்.

அனாமிகா கலை இலக்கியகூடல் மற்றும் மகுடம் இலக்கியவட்டம் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் 26.12.2021 அன்று சுனாமி நினைவில் நினைவுப்பேருரை இரண்டு நூல்களின் வெளியீடும்ஏழுநூல்களின் அறிமுகம் மற்றும் மூத்த கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைந்த வகையில் ஒரேமேடையில் நடாத்தினர்.

இந்நிகழ்வின் விழா அறிமுகத்தினை மகுடம் கலை இலக்கியவட்டத்தின் எழுத்தாளர் வி.மைக்கல்கொலின் நிகழ்த்தினார் இந்நிகழ்வினை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி அவர்கள் தலைமையேற்று நடாத்தியதோடு இந்நிகழ்விலே பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

நினைவுப்பேருரையினை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரமிஸ் அப்துல்லா அவர்கள் நிகழ்த்தினார்நூல் வெளியீட்டுரையை ஆரையம்பதி காகலை இலக்கிய வட்டத்தின்  எழுத்தாளரும் பாடசாலை அதிபருமான மணிசேகரன் அவர்கள் நிகழ்த்தியதோடு வரவேற்புரையை கிழக்குப் பல்கலைகழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் .மோகனதாசன் அவர்களும் விருதுரையினை ஓய்வுநிலை அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் அவர்களும் நன்றியுரையினை செல்வி அம்ரிதா விஜயன் அவர்களும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்விலே மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கியப் பரப்பிலே நீண்டகாலம் தனித்துவமான தடத்தினைபதித்து பயணிக்கும் மூத்த எழுத்தாளர் இலக்கியவாதி திருமதி மண்டூர் அசோகாஅவர்கள் பொன்னாடை அணிவித்து பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்விலே சேனையூர் கலம்பகம் மற்றும் டொமினிக் ஜீவா எனும் இருநூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டதோடு கண்ணகி குளிர்த்தி அம்மானைஎங்கள் பெருநிழல்முதுசங்கள் மூன்றுகேணிப்பித்தன்அறிமுகம் ஆகியநூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன.













SHARE

Author: verified_user

0 Comments: