18 Nov 2021

காவி உடை தரித்தால் எதையும் செய்து விடலாம் என அம்பிட்டிய தேரரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

SHARE

காவி உடை தரித்தால் எதையும் செய்து விடலாம் என அம்பிட்டிய தேரரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

புத்த பகவானிக் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் தலைகீழாக கடந்த சில வருடங்களாகக மட்டக்களப்பிலுள்ள அம்பிட்டிய சுமரரெத்தின தேரர் செயற்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்க விடையமாகும். இதனால இவரது செயற்பாடுகள் மக்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. ஒரு பெண் அதிகாரி தொழில் புரியும் காரியாலயத்தில் திங்கட்கிழமை சென்று அந்த அதிகாரி வெளியே வரமுடியாமலும், வெளியிலுள்ள உத்தியோகஸ்த்தர்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். இது அவரது காடைத்தனமாகும். இவரது இச் செயற்பாட்டை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் மார்க்கண்டு நடராஜா(நடா) தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை(16) கோட்டைக்கல்லாறிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

பிக்கு என்றாலும், பொது மக்கள் என்றாலும் அரச சேவையைப் பெறுவதாயின் அங்குள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை மறந்து செயற்பட முடியாது. காவி உடை தரித்தால் எதையும் செய்து விடலாம் என அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்த பிக்குவுக்கு எதிராக ஜனநாயக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்திற்கும் முக்கியமான கடப்பாடு உள்ளது.

ஜனநாயக அரசு என்றால் அரசைக் கொண்டு நடாத்துகின்ற உயர் அதிகாரிகளை சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடாத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. மதகுரு என்றால் அவர் எதையும் செய்யலாம் என தற்போது இலங்கையில் தோற்றமளிக்கின்றது. பொதுமக்கள் அரச சட்ட திட்டங்களை கடைப்பிடித்து செயற்படுகின்றபோதும் இவ்வாறான மதகுரு போன்றவர்கள் இவ்வாறு செயற்படுவதை ஒதுபோதும் அனுமதிக்க முடியாது. 

ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் சட்டம் அனைவருக்கும் சமமாகும். ஆனால் இவ்வாறான மதகுரு போன்றவர்களுக்கு சட்டம் மேலோங்கியிருக்கின்றது. இதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே எமது பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும். உயர் அதிகாரிகளும், இக்குறித்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டக்களப்பு நகரிலே இருக்கின்ற பிக்குவுக்கு பட்டிப்பளையிலே காணி தேவை என்றால் உரிய நடைமுறைகளுக்கும், அங்குள்ள அதிகரிகள் எடுக்கும் செயற்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு காணியைப் பெறலாம். அதுதான் சாதாரண நடைமுறை. காணி கொடுப்பது தொடர்பில் நாம் பேசவில்லை. மாறாக இலங்கையில் இவ்வாறு செற்பட முயன்றால் அரசாங்கம் தேவையில்லை.

வடகிழக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் இவ்வாறான மதகுருமார், மற்றும் சில அரசியல்வாதிகளினால்தான் இடம்பெற்றிருந்தன. எனினும் இவ்வாறு தேரரின் சண்டித்தன செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. என கருத்துத் தெரிவித்த அவர் நாடாளுமன்றில் நிதி அமைச்சரால் முன் வைக்கப்பட்டள்ள வரவு செயலவுத்திட்டம் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: