10 Oct 2021

மனநோயாளர்கள் வைத்திசயாலையில் சிகிச்கை பெறுவதற்கு பல தடைகள் இருக்கின்றன – வைத்தியர் டான்.

SHARE

மனநோயாளர்கள் வைத்திசயாலையில் சிகிச்கை பெறுவதற்கு பல தடைகள் இருக்கின்றனவைத்தியர் டான்.  

வருடாந்தம் ஓக்டோபர்  - 10 ஆம் திகதி மனநல தினம் அனுஸ்ட்டிப்பப்பட்டு வருப்படுகின்றது. “சமத்துவம் அற்ற உலகில் மக்களின் மன நிலையைப் பாதுகாப்பது எவ்வாறுஎன்ற தொணிப் பொருளில் இம்முறை மன நல தினம் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது. இன, மொழி, போன்றவற்றால் நாட்டில் மாத்திரமல்லமல் உலகளாவிய ரீதியிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற. மனித உரிமைகள், பாலியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும், மனநலம் குறைந்த மக்களுக்கும் உரிமைகள் பல மறுக்கப்பட்டிருப்பதனாலும், மனநல பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவைகளைக் குறைக்கவேண்டும் என்பதுதான் இவ்வருடத்திற்குரிய கருப்பொருளாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் என ஏறாவூர் வைத்தியசாலையின் மனநல வைத்தியர் டான் சௌந்தரராசஜா தெரிவிக்கின்றர்.

ஒக்டோபர் 10 அனுஸ்ட்டிக்கப்படும் சர்வதேச மனநல தினத்தையொட்டி அவர் ஏறாவூர் வைத்தியசாலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(10) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

எமது அலகை 2018 ஆம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக விருத்தியடைய வைத்துள்ளோம். சிறுவர்களுக்கான மனநல சிகிச்கைகளையும் நாத்தி வருகின்றோம். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் உரிமைகள் போன்ற விடையங்களையும் எமது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்துள்ளோம்.

மனநோயாளர்கள் வைத்திசயாலையில் சிகிச்கை பெறுவதற்கு பல தடைகள் இருக்கின்றன. மக்களின் பிளையான எண்ணக்கருக்கள், பேய் பிசாசு, அற்ககோள் பவனை, அது ஒரு இழிவான நோய்,  போன்ற தவறான எண்ணங்களால் மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றார்களில்லை.  இதனை நாம் மக்களிடத்திலும், பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வுகைள மேற்கொண்டு இந்த நோயை அறிந்தவர்கள், வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்குக் கொண்டு வருவதன் மூலம், இரண்டு வாரங்களில் சிகிச்சை பெற்று வீடு செல்லலாம் என்பதை தெழிவு படுத்தி வருகின்றோம். தற்போது இங்கு சிகிச்சை பெற்ற நோயாயர்கள் சுகமடைந்ததும் அவர்கள் அடையாளம் கணும் மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட வேறு நபர்களை அழைத்துக் கொண்டு வருகின்றார்கள்.

தற்போதைய கொவிட் காலத்தில் சிறந்த சூழலில் சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்கிணங்க நாம் செயற்பட்டு வருகின்றோம். மீன் வளர்ப்பு தொட்டி, தையல் இயந்திரம், தொலைக்காட்சி பார்த்தல், எந்த நேரமும் அவர்களுக்கு விரும்பி உணவுளைத் தயார் செய்து கொள்வதங்குரிய வசதிகள், விளையாட்டு உபகரணங்கள், குடும்பத்தினருடன் அமர்ந்து கதைப்பதற்கு ஏதுவான வசதிக வாய்ப்புக்களையும் செய்து வைத்திருக்கின்றோம்.

சில நோயாளிகளை வந்தவுடனேயே கட்டுப்படுத்துவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர்களைக் கவனிக்க விசேட அறை வசதிகளும் உள்ளன. அனைத்து நோயாளர்களும், எமது உத்தியோகஸ்த்தர்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் எந்த நேரமும் எம்மைத் தொடர்பு கொள்வதற்குரிய தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: