10 Sept 2021

களுவாஞ்சிகுடியில் கோகுலரஞ்சனால் வடிவமைக்கப்பட்ட உழவு இயந்திரம்.

SHARE

களுவாஞ்சிகுடியில் கோகுலரஞ்சனால் வடிவமைக்கப்பட்ட உழவு இயந்திரம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனிதன் ஏதோ ஒரு வித்தில் பல்துறைசார்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றான். தற்கால கொவிட் - 19 காலத்திலும் சில முயற்சியுடையோர் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் தமது பொழுதை வீணாகக் கழிக்காமல் அவற்றை மிகுந்த பிரயோசனமாகப் பயன்படுத்துபவர்களும் தற்காலத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

எனினும் கண்டு பிடிப்புக்களுக்கும், புதிய புதிய உற்பத்திகளுக்கும், இறக்குமதிகளுக்கும், சர்வதேசத்தையே நம்பியிருக்கும் நம் இலங்கையில் ஆங்காங்கே எங்கேயே மூலை முடுக்குகளில் தத்தமது திறமைகளைக் காண்பித்து, புதிய புதிய கண்டு பிடிப்புக்களையும், உற்பதிகளையும் வெளிக்காட்டுபவர்களாக நாம்நாட்டு கண்டுபிடிப்பானர்கள், இருக்கத்தான் செய்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரசேத்திலுள்ள களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்தான் கந்;தசாமி கோகுலரஞ்சன். சிறிய வயதிலிருந்தே தொழில் நுட்பத்துறையில் ஆர்வமான இவர், மத்திய கிக்கு நாடுகளில் கணிணி திருதினராக தகுந்த வேதனத்திற்கு தொழில் புரிந்து வந்துள்ளார். தற்போது வீட்டிலிருந்து கொண்டு பல கம்பனிகளுக்கும், நிறுவனங்களுக்குமுரிய கணிணிகளைப் பழுது பார்த்துக் கொடுத்து  வருவதாக தெரிவிக்கும் அவர் தற்கால கொவிட் - 19 காலத்தில் கணிணி திருத்தும் வேலைகள் குறைவடைந்துள்ளதா
















ல் 45 நாட்களில் சுமார் 4 இலசட்சம் ரூபா செவு செய்து கழிவுப் பொருட்களைக் கொண்டு புதிய ரக உழவு இயந்திரம் ஒன்றைக் உருவாக்கி கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

விவசாயக் கிராமத்தில் பிறந்ததாலும், விவசாயத்தில் அதிக நாட்டமுள்ளதாலும், தாம் எவரிடமும் கையேந்தாமல் விவசாயிகளுக்கு புதிய உழவு இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுதான் இவ்வுழவு இயந்திரக்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும், இதற்கு அரச அங்கீகரம், மற்றும் பதிவுச் சான்றிழ் போன்றவற்றைப் பெற்றுத்தர அரசாங்கம் உதவவேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

கோகுலராஞ்சன் புதிதாக வடிவமைத்துள்ள சிறியரக உழவு இயந்திரத்தை அப்பகுதி மக்கள், மற்றும் விவசாயிகள் அனைவரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்


SHARE

Author: verified_user

0 Comments: