26 Sept 2021

200 வருடங்கள் பழமைவாய்ந்த யுத்தகாலத்தில் உடைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தின் புணரமைப்புக்கு உதவுமாறு கோரிக்கை.

SHARE

200 வருடங்கள் பழமைவாய்ந்த  யுத்தகாலத்தில் உடைக்கப்பட்ட  பிள்ளையார் ஆலயத்தின் புணரமைப்புக்கு உதவுமாறு கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பூச்சிக்கூடு கிராமத்தில் அமைந்துள்ள வேப்பையடிப்ப பிள்ளையார் ஆலய புணரமைப்புக்குரிய உதவிகளைக் கோரி நிற்பதாக அந்த ஆலயத்தின் தலைவர் மனோகரன் தெரிவிக்கின்றார்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குபட்ட எல்லைப்புறத்தின் அம்மபாறை மாவட்டத்தின் ஓரத்தில் தமிழர்களின் காவலாய் அமையப் பெற்றுள்ள இந்த ஆலயம் மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டிந்த இந்த ஆலயத்தின் புணர்நிருமாணப் பணிகளை பொதுமக்களின் ஆதரவுடன் முன்னெடுத்துள்ள இந்நிலையில் அதனை முற்றுமுழுதாகப் பூரணப்படுத்த முடியாதுள்ளதாகவும், இதற்கு தனவந்தர்கள், ஏனைய பொதுமக்கள், நலன்விரும்பிகள், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அனைவரிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் எல்லையில் அமைந்துள்ளதுதான் எமது இந்த ஆலயமாகும், இது சுமார் 200 வருடங்கள் பழமைவாய்ந்த ஆலயமாகும், இதனை கடந்த யுத்த காலத்தில் இரண்டு தடவைகள் ஓரளவு பணரமைப்புச் செய்து கும்பாபிஷேகம் மேற்கொள்ள முயன்றபோதும் அவை கைகூடாமல் அப்போது உடைக்கப்பட்டு தகர்க்கப்பட்டன. இந்நிலையில் எமது கிராமத்தில் அனைவரும் கூலித் தொழில் மேற்கொள்ளும் மக்கள்தான் உள்ளார்கள் அவர்களிடமிருந்து பெறும் சிறிய சிறிய தொகை நிதியையும், பிரதேச செயலகத்தினால் தரப்படும் சிறிய தொகையையும் வைத்துக் கொண்டு தற்போது மீண்டும் புணரமைப்புச் செய்துகொண்டு வரும் இந்நிலையில் அது போதாதுள்ளது.

எனவே எமது கிராமத்தில் அமைந்துள்ள எமது காவல் தெய்வமான வேப்பையடிப் பிள்ளையார் சுமார் 200 வருடங்களான கொட்டகையில்தான் இருந்து வருகின்றது, எனவே தற்போதைய நிலையில் எம்மால் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு பரோபகாரரிகளிடமிருந்து உதவிகளை வேண்டிய நிற்கின்றோம். அவ்வாறு உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் இந்த வருடத்தில் நாம் கும்பாபிஷேகம் மேற்கொண்டு, எமது எல்லைப் புறத்தையும் பாதுகாத்து, எமது ஆம்ம திருப்திவழிபாடுகளையும் மேற்கொள்ள முடியும் என அந்த ஆலயத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கின்றார்.















SHARE

Author: verified_user

0 Comments: