24 Aug 2021

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நிறைவடைந்தது.

SHARE

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்  நிறைவடைந்தது.

வரலாற்றுப் புகழ்பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி கோவிலின் மகோற்சவ கொடியேற்றம் சென்ற 7ஆம் திகதி மிகவும் பக்திபூர்மாக இடம்பெற்றது. தீர்த்தோற்சவ திருவிழா வழமைக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை(22) பக்தர்களின் பிரசன்னத்தை மட்டுப்படுத்தி இம்முறை ஆலயத்தின் நிருவாகம் மற்றும் குருமார்கள் ஆகியோர் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் 16 நாட்கள் திருவிழா நடைபெற்றது. விசேட  மயில்கட்டுத்திருவிழா 19ஆம், 20ஆம், 21ஆம் ஆகிய மூன்று நாட்களும் விசேடாக இடம்பெற்றது. அத்துடன் கொடியிறக்கம் ஞாயிற்றுக்கிழமை(22) பி.ப 4.00மணிக்கு இடம்பெ ற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும்தொற்றுக் காரணமாக அடியார்களை ஆலயத்திற்குள் வழிபாடுகளுக்கு அழைப்பதில்லை என்ற அறிவிப்பை அடுத்து அனைத்து அடியார்களும் வீடுகளில் இருந்து முருகப்பெருமானை வழிபாட்டுக்கொண்டிருந்தனர். ஆலயத்திற்குள் நாளாந்த பூசை செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற குருக்கள்மார் மற்றும் ஆலய பணியாளர்கள் மற்றும் நிருவாத்தினர் சுகாதார நடைமுறையைக் கடைப்பிடித்து ஆலய மகோற்சவகால செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





           


SHARE

Author: verified_user

0 Comments: