19 Jul 2021

பஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.

SHARE

பஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.

பஸில் ராஜபக்ஸ அவர்களை நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் சகல துறைகளுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன. இதன்மூலம் பலஅபிவிருத்தித்திட்டங்கள் வரவுள்ளன.

என ஸ்ரீ லங்ங்கா பொதுஜன பொரமுன் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தமிழ் பிரதேசங்களுக்குரிய அபிவிருத்திக் குழுவின் உபதலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

7 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி உள்ளக வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(16) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையல்

நான் அரசிலுக்குள் செல்வேன் என நினைக்கவில்லை சந்தர்ப்ப சூழலால் அரசியலுக்குள் தள்ளப்பட்டுள்ளேன். பொதுஜன பெரமுன கட்சியினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல அபிவிருத்திகளைக் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை இருந்ததன் காரணத்தினால்தான் இக்கட்சியை நான் மட்டக்களப்புக்குக் கொண்டுவந்தேன். அதன்மூலம் தற்போது பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நானும் 30 வருடங்களாக தேசியத்திற்குப் பின்னால் சென்றவன் அவ்வாறு செல்வதனால் மக்களை வளப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் அபிவிருத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன்.

வேலைவாய்ப்பு, உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளையும் அரசாங்கத்தினால்தான் செய்ய முடியுமே தவிர தேசியம் பேசுபவர்களால் எதையும் செய்ய முடியாது. எனவே அனைவரும் அரசாங்கத்தை வெறுப்பாக பார்க்காமல் அரசாங்கத்துடன் இணைந்து போனால் அனைத்தையும் சாதிக்க முடியும். நான் பட்டிருப்புத் தொகுதியை அபிவிருத்திக்காக பாரம்எடுத்துள்ளேன் அனைத்து அபிவிருத்திகயையும் கொண்டுவருவேன். அதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

களுவாஞ்சிகுடிக்கு முதற்கட்டமாக 7 கோடி ரூபாவில் வீதி அபிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டம் 8 கோடியே 40 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இவ்வாறு அனைத்து வீதிகளும், இந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படும். இதற்கு ஜனாதிபதி எமக்கு வாக்குறுதியளித்துள்ளார்.

நான் அரசியலுக்கு விலைபோகவோ, உழைப்பதற்காகச் செல்லவில்லை. நான் எனது காசில் வாழ்ந்து விட்டுச் செல்வேன். எமக்குத் தெரியும் ஆளும் கட்சியினூடாக மாத்திரம்தான் அபிவிருத்திகளைச் செய்யமுடியும்.  இந்திய முதலீட்டாளர்கள் மட்டக்களப்பிற்கு வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். தேர்தலில் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் யாரும் அபிவிருத்திக்குத் தடையாக இருக்காதீர்கள், எதிர்வருகின்ற கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை பொதுஜனப் பெரமுனதான் கைப்பற்றும்.  அதிகளவு தேவை இந்த பட்டிருப்புத் தொகுதியில் உள்ளது அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து வந்து உங்களது கோரிக்கைகளை என்னிடம் தெரிவியுங்கள் எந்தவித கட்சி பாகுபாடுகளுமின்றி அனைத்தையும் நான் பூர்த்திசெய்து தருவேன். உலகமே கொவிட் - 19 ஆல் திண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்நிலையில் எமது கட்சியின் ஸ்தாபவர் பஸில் ராஜபக்ஸ அவர்களை நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியாவிலே அவர் சிறந்த ஒரு தலைவர். இவரால் பொருளாதார ரீதியில் நாட்டில் பெரிய மாற்றங்கள் வரும், பல தேவைகள் நிறைவேறும். எனது சிபார்சுக்கு மாத்திரம் 2000 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான அபிவிருத்திக் முதற்கட்டமாக தரப்பட்டுள்ளன.

பஸில் ராஜபக்ஸ அவர்களை நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் சகல துறைகளுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன. இதன்மூலம் பலஅபிவிருத்தித்திட்டங்கள் வரவுள்ளன. இதே பஸில் ராஜபக்ஸ அவர்கள் முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது கிழக்கின் உதயம் எனும் திட்டத்தைக் கொண்டுவந்து அப்போது பல அபிவிருத்தித் திட்டத்தைச் செய்தவர். அவர் அனைவரையும் ஒன்றாக நேசிக்கக்கூடிய சிறந்த தலைவர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவரால் வகுக்கப்பட்ட அதிகளவு திட்டங்கள் உள்ளன. அதில் முதல்கட்டமாக தொழில் பேட்டை ஒன்றை உருவாக்கி 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளோம். காணி இல்லாதோருக்கு காணி வழங்குதல் வீதி அபிவிருத்தி, நாடு கொவிட் - 19 இலிருந்து மீண்டு பழைய நிலமைக்கு வரும்.

கொவிட் - 19 வருவதற்கு முன்போ சிலர் வீட்டுக்கு வீடு 5 கிலோ அரிசியும், ஒரு உப்பு பைக்கட்டும் கொடுத்தார்கள் இது தற்போதைய நிலையில் மக்களுக்குத் தேவை இல்லை எத்ததையோ படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளார்கள், பெரிய பெரிய அபிவிருத்தித்திட்டங்களை எம்மிடம் தாருங்கள். 3 மொழியைக் கதைப்பதனாலோ, வெளிநாட்டு சக்திகளின் நிதியைப் பெற்றுவிட்டு கதைப்பதனாலோ, வீரவசனங்களை  பாராளுமன்றத்தில், கதைப்பதனால், எதனையும் சாதிக்கப் போவதுமில்லை. அபிவிருத்தி வரப்போவதில்லை. என அவர் இதன்போது தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: