25 Jul 2021

ஆரம்பத்தில் தமிழ் மக்கள் கேட்டுக் கொண்டது தமிழ் மொழியைப் பேசுகின்ற உரிமையைத்தைன் கேட்டிருந்தார்கள். மங்கள சமரவீர

SHARE

ஆரம்பத்தில் தமிழ் மக்கள் கேட்டுக் கொண்டது தமிழ் மொழியைப் பேசுகின்ற உரிமையைத்தைன் கேட்டிருந்தார்கள். மங்கள சமரவீர.

நாட்டின் அழிவுக்கு அடிப்படையாக அமைந்தது கறுப்பு யூலை கலவரம்தான். இலங்கை ஒரு ஆக்கபூர்மாக செயற்பட்ட நடாமாகும். பொதுநலவாய நாடுகளில் சிறப்பு வாய்ந்த நாடாக லீக்குவானி அவர்கள் குறிப்பிட்டடிருந்தார். இன குல, கட்சி வேறுபாடுகள் காணப்பட்டதன் காரணமாகத்தான் இந்த நாட்டிலி பல்வேறுபட்ட பிறவுகள் காணப்பட்டன. ஆரம்பத்தில் தமிழ் மக்கள் கேட்டுக் கொண்டது தமிழ் மொழியைப் பேசுகின்ற உரிமையைத்தைன் கேட்டிருந்தார்கள். பெடரல் என்பதை அவர்கள் கேட்டிருக்கவில்லை. மொழி உரிமை மறுப்பட்டதன் பின்னர்தான் பெடரல் என்ற விடையத்தை சேர்த்திருந்தார்கள். 

என மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சூம் தொழில் நுட்பத்தினுடான கலந்துரையாடலின்போது இலங்கையின் முன்னாள், முன்னாள் நிதி அமைச்சர்  மங்கள சமரவீர அவர்களிம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

எமது நாட்டின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது, இனவாதம் மற்றும் தீவிரவாதமாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் இனவாதக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இனவாதம் பேசிப்பது இனவாதத்தைதான்.  1983 ஆம் ஆண்டு யூலைக் கலவரம் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வலுவான அமைப்பாக மாற்றப்பட்டது. தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில பலாத்காரமாக இணக்கப்பட்டார்கள். அதற்குக் காரணம் நாங்கள்தான். 30 வருட காலமாக இரு தரப்பிலும் உயிர், உடமை அழிவுகள் என பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் திறந்த பொருளாதாரம் 1983 யூலைக் கலவரத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. என அவர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: