1 Jul 2021

கட்டாக்காலி கால்நடைகளால் இன்னல்களை எதிர்கொண்டுவரும் பிரயாணிகளும், பொதுமக்களும்.

SHARE

கட்டாக்காலி கால்நடைகளால் இன்னல்களை எதிர்கொண்டுவரும் பிரயாணிகளும், பொதுமக்களும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குபட்பட்ட பிரதான வீதிகளில் சிலர் பொறுப்பற்ற வித்தில் கட்டாக்காலியாக அவர்களது கால்நடைகளை விட்டுள்ளனர். அவை பகல் மற்றும் இரவு வேளைகளிலும் வீதிகளில் திரிவதனால் பிரயாணிகளும், பொதுமக்களும், மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கட்டாக்காலியாக மாடுகள், மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை விடுபவர்களுக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் பலமுறை தெரிவித்தும் அவர்கள் இவ்வாறு தமது கால்நடைகள் பொறுப்பற்ற விதத்தில் விட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு கால்நடைகள் பகலில் மாத்திரமின்றி இரவு வேளைகளிலும், வீதிகளில் திரிவதனாலும், உறங்குவதனாலும், வீதி விபத்துக்களும், அடிக்கடி ஏற்படுவதாக அதனை நேரில் அதானிக்கும் வர்த்தகர்களும், தெரிவிக்கின்றனர்.

எனவே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினர் இவ்வாறு கட்டாக்காலியாக கால்நடைகளை விடும் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் பட்டசத்திலேயே இதனை தடுக்க முடியும், என்பதோடு பாதசாரிகள், தடையின்றிப் பயணிக்கவும் முடியும் எனவும், பொதுமக்களும், பிரயாணிகளும், அங்கலாய்க்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்புகல்முனை பிரதான வீதி, களுவாஞ்சிகுடி வைத்தியசாலை வீதி, பட்டிருப்பு சந்தி, மணல் வீதி, பொதுச் சந்தை பகுதி உள்ளிட் பல பகுதிகளிலும், இவ்வாறு கால்நடைகள் கட்டாக்காலியாக திரிவதை அவதானிக்க முடிகின்றது.







 

SHARE

Author: verified_user

0 Comments: