25 Jul 2021

இந்த ஆட்சி தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளன அனுரகுமார திசாநாயக்க.

SHARE

இந்த ஆட்சி தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளன அனுரகுமார திசாநாயக்க.

வடகிழக்கில் இருக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், மக்கள் குறிப்பாக தமிழ் பேசுகின்ற மக்கள் எமது கட்சியைப் பற்றி கடந்த காலங்களில்  மொழிப்பிரச்சனை காரணமாக விளங்கிக் கொள்ளாத நிலமைதான் காணப்பட்டிருந்தனது. அது இந்த நிகழ்ச்சி காரமாக அப்பகுதி மக்களுக்குச் சென்றடையும் என நினைக்கின்றேன். இந்த அரசாங்கம் 69 லெட்டசம் வாக்குகளைப் பெற்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றில் பெற்றுக் கொண்டது. அவர்கள் 2015 இல் தோல்வி அடைந்திருந்தாலும், மக்களிடத்தில் கோட்டபாய எனும் பெயர் நிலவி வந்தது. பின்னர் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ந அவரிடம் இருந்த தொணி மக்களிடத்தில் காணப்பட்டிருந்தன. 

2019 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆட்சி தொடர்பில் மக்கள் எதிர்பார்த்த விடையங்கள் நடைபெறவில்லை. இதனால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் விடுபொடியாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டு தொடக்கம்  2019 ஆம் ஆண்டு வரையிலான ரணில், மைத்திரி அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றியிருக்கவில்லை.

என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சூம் தொழில் நுட்பத்தினுடான கலந்துரையாடலின்போது  கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….


மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வந்த அரசாங்கத்திற்கு மிகக் குறுகிய காலத்திற்குள் மக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். கோட்டபாய ராஜபக்ஸ பழைய சிந்தனையற்றவர் என கூறப்பட்டாலும், குடும்ப ஆட்டி தொடர்பில் சம்மந்தப்பட்வராக இருப்பதன் காரணத்தினால்தான் மக்களிடம் எதிர்ப்பு வருகின்றது. 

பசளை, கொவிட், மற்றும், நாட்டின் பொருளாதாராம் உள்ளிட்ட அனைத்தும் பின்னடைவில் உள்ளன. சுதந்திரம் கிடைத்து 73 வருடங்களில் கிடைக்கப்பெற்ற எமது பொருளாதாரம், தற்போது ஒரு பாரதூரமான நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. 1950 ஆம் ஆண்டு 100 கோடியாக காணப்பட்ட கடன் தற்போது 16.6 றில்லியனாகக் காணப்படுவதையிட்டு மிகவும் கவலையளிக்கின்றது.  1350 மில்லியன் வருமாமும், கடனாக 1976 மில்லியனும் , திறைசேரியின் இயலுமை காணாமலுள்ளது. வருமானத்தைவிட கடன் கூடுதலாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டைக் கொண்டு செல்லக்கூடிய இயலாத நிலமை காணப்படுகின்றது. கடந்த வருடத்தினுடைய கடன் பழு 2 றில்லியன், மேலும் இந்த நாடு பணம் உழைக்க முடியாத  பிரச்சனையில் காணப்படுகின்றது. ஒரு றில்லியன் கோடி பணம் முத்திரையிடப்பட்டுள்ளது. 20200 ஆம் ஆண்டுல் உள்நாட்டுக் கடன், வெளிநாட்டுக்கடன், பெறுவதில் ஆர்வம் காட்டியிருந்தன. எமது நாடு கடன் பழு மிக்க ஒரு நாடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: