14 Jun 2021

கொவிட் - 19 காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE

- 19 காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

கொவிட் - 19 காரணமாக அமுலிலுள்ள நடமாட்டத் தடை காரணமாக அன்றாடம் நாட்கூலி வேலைசெய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தமது கடும்பத்தைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பொரியபோரதீவு கிராமதிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நாட் கூலி வேலை செய்யும் பொதுமக்களுக்குமாக சனிக்கிழமை(12) மாலை ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் ஏற்பட்டில், அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணித் தலைவி திருமதி..காந்தரூபி அவர்களினால் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டன.

கொவிட்  - 19 நிலமையால் நடமாட்டத்தடை உத்தரவுக்கமைய வாழ்வாதாரங்களை இழந்துள்ள பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இதன்போது உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.








 

SHARE

Author: verified_user

0 Comments: