9 Apr 2021

அனுமதிப்பத்திர விதிமுறைகளுக்கு முரணாக மணல் ஏற்றிச்சென்ற ஐந்து கனரக வாகனங்கள்.

SHARE

அனுமதிப்பத்திர விதிமுறைகளுக்கு முரணாக   மணல் ஏற்றிச்சென்ற ஐந்து கனரக வாகனங்கள் மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் சாரதிகள் ஐவரும் வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  HWK  ஜயந்த தெரிவித்துள்ளார்.

மணல் ஏற்றிச்செல்வதற்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ள போதிலும் வாகனத்தின் கொள்ளளவைவிட மேலதிகமாக   மணல் ஏற்றப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் கரடியனாறு பகுதியிலிருந்து    மேல் மாகாணம்  நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது   செங்கலடி கறுத்தப்பாலம் பிரதேசத்தில் பொலிஸார் சோதனையிட்டவேளை   இச்சட்டவிரோத நடவடிக்கை தடுக்கப்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி  சப் இன்ஸ்பெக்டர் எச்எம். ஷியாம் தலைமையிலான குழுவினர் இச்சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சாரதிகள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: