6 Mar 2021

திருக்கோவில் ஷீரடி சாய் கருணாலயம் மகா கும்பாவிஷேகம்.

SHARE

(துஷி) 

திருக்கோவில் ஷீரடி சாய் கருணாலயம் மகா கும்பாவிஷேகம்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தாமரைக்குளம் எனும் இடத்தில் பிரமாண்டமாய் அமையப்பெற்றுள்ள ஷீரடி சாய் கருணாலயத்தின் ஷீரடி சாய்நாதர் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெருவிழா எதிர்வரும் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் 10.30 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளதாக ஷீரடி சாய் கருணாலயத்தின் ஆதின கர்த்தா திருமதி சீதா விவேக் (நோர்வே) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் ஷீரடி சாய்நாதருக்கு முதன் முதலாக பிரமாண்டமான முறையில் கருணாலயம் ஒன்று கட்டியெழுப்பப்ட்டுள்ளது. மிக நீண்டகாலமாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு கல்வி மற்றும் சமய, சமூக சேவைகளை புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் பெரியகல்லாற்றைச் சேர்ந்த விவேக் சீதா குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். ஷீரடி சாய் பாபவின் பக்தர்களான இவர்கள் தங்களுடைய சமூகப்பணியினை விஸ்தரிக்கும் நோக்கில் ஷீரடி சாய்நாதருக்கான கருணாலயம் ஊடாக தர்மப்பணியினை ஆற்றவுள்ளனர்.

இவ் ஆலயத்தின் பூர்வாங்க கிரியைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணியளவில் விநாயகர் வழிபாடு, பிரதிஷ்டா சங்கல்யம், மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளன. இங்கு எதிர்வரும் ஏப்பிரல்  முதலாம் திகதி ஷீரடி சாய் நாதருக்கு பக்தர்கள் பால் காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து 02 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த் வேளையில் ஷீரடி சாய் நாதர் பிரதிஸ்டை மகா கும்பாவிஷேக குட முழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது. கும்பாவிஷேகத்தை தொடர்ந்து 48 தினங்கள் தினமும் காலை 9 மணிக்கு மண்டலாபிஷேக பூசையும், சாய்நாதருக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.

ஈழத்து இசைக் கலைஞர் ஜெயந்தன் கந்தப்புவின் இசையில் உருவான  ஷீரடி சாய்நாதரின் பக்திப்பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா வவுனியாவில் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன், 02 ஆம் திகதி கொழும்பு ஷீரடி சாய் மத்திய நிலையத்திலும் இந் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  





SHARE

Author: verified_user

0 Comments: