15 Mar 2021

தமிழ் - முஸ்லிம் பிரதேசத்தின் இன நல்லுறவை மேம்படுத்தி அபிவிருத்தியை கட்டியெழுப்பக்கூடிய செயற்பாடுகளே தொடர்ந்தும் என்னால் முன்னேடுக்கப்படும்.

SHARE

இன நல்லுறவை விடுத்து ஒரு சமூகத்தை அடக்கி இன்னொரு சமூகம் மேலெழும்புவது அரசியல்ல, இனங்களுக்கிடையேயான உறவைக் கட்டியெழுப்பக்கூடிய முறைமையிலேயே எனது பிரதேச சபை செயற்பாடுகள் அனைத்து இருக்கும் என மண்முனைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர், தருமரெட்ணம் தயானந்தன் தெரிவித்துள்ளார்.

கிரான்குளம் சுகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிரான்குள பொதுநூலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிமை(14)இரவு இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மண்முனை பிரதேச சபை உறுப்பினர்கள், கிரான்குளம் கிராமத்தின் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் தலைவர்கள், விளையாட்டுக்கழக பிரநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டதுடன், தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

மண்முனை பிரதேசத்தில் அனியாயமாகச் செயற்படும் ஒருவரை தவிசாளராக நீண்டகாலம் பதவியில் வைத்திருக்க முடியாது. தமிழ் - முஸ்லிம் பிரதேசத்தின் இன நல்லுறவை மேம்படுத்தி அபிவிருத்தியை கட்டியெழுப்பக்கூடிய செயற்பாடுகளே தொடர்ந்தும் என்னால் முன்னேடுக்கப்படும்.

பல அழுத்தங்களுக்கு மத்தியில் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக நான்கு கட்சியிலுள்ள ஐந்து உறுப்பினர்கள் ஒன்றாகப் பயணித்ததன் மூலமே புதிய தவிசாளராக என்னைத் தெரிவு செய்தமையினையிட்டு மிகுத்த மகிழ்ச்சியடைவதுடன், சபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன நல்லுறவை விடுத்து ஒரு சமூகத்தை அடக்கி இன்னொரு சமூகம் மேலெழும்ப வேண்டும் என நினைப்பது அரசியல்ல. ஆகவே பல வளங்களைக் கொண்டுள்ள ஆரையம்பதி பிரதேச சபையினை முறையாக நடைமுறைப்படுத்துகின்ற தேவைப்பாடு தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. நிலத்தடிநீர் வற்றாமல் இருத்தல் மற்றும் மனதார ஒருவரை பாராட்டுதல் என இரு விடயங்களும் ஒரு சமூகத்தில் ஆரோக்கியமாக இருந்தால் மாத்திரமே சிறப்பான பிரதேச சமூகம் வளரமுடியும். அவ்வாறு இரண்டு விடயங்கைளும் ஒரு சமூகத்தில் இல்லாவிட்டால் அச்சமூகம் ஆரோக்கியமற்ற, அபிவிருத்தி அற்ற சமூகமாக கணிக்கப்படும்.

பிரதேச சபை வரவுசெலவுத் திட்டத்தில் எனக்கு ஆதரவு அளித்த பத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய தற்துணிவில் அபிவிருத்தி வேலைகளுக்கு நிதியொதுக்குவேன் என்பதை திடமாக தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் இரு சமூகங்களும் வாழ்கின்ற மண்முனைப்பற்று கிராம மக்களுக்கு என்னால் இயன்ற முடியுமான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க ஆயத்தமாக இருக்கின்றேன். கடந்த காலங்களை போல் அல்லாமல் இன, மத, கட்சி பேதங்கள் பாராது ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: