27 Mar 2021

வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்திற்கு உதவும் கரங்கள் அமைப்பு கதிரைகள் அன்பளிப்பு.

SHARE

வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்திற்கு  உதவும் கரங்கள் அமைப்பு கதிரைகள் அன்பளிப்பு.

மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்திற்கு உதம்கரங்கள் அமைப்பு 50 பிளாஸ்ற்றிக் கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர். வம்மியடியூற்று கிராமத்திலிருந்து வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் இளைஞர்களின் உதவியுடன் செயற்பட்டு வரும் உதவும்கரங்கள் அமைப்பு. வித்தியாலய அதிரிடம் இவ்வாறு கதிரைகளை வழங்கி அன்பளிப்புச் செய்துள்னர்.

வித்தியாலய அதிபர் .சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் சு.தருமலிங்கம், ஆலோசகர் .பிரபாகரன், பொருளாளர் வீ.லேணுஜன், உப செயலாளர் கண்ணதாஸ், முன்னாள் ஆலய தலைவர் .தருமலிங்கம், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

எமது பாடசாலையில் தளபாடப் பற்றாக்குறை நிலவி விருகின்றது. அதன் ஒரு பகுதியை நிவர்த்தி செய்யும் முகமாக, எமது வேண்டுகோளிற்கு இணங்க உதம் கரங்கள் அமைப்பு 50 பிளாஸ்றிக் கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர். இதற்கு எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதுபோன்று இந்த உதவும் கரங்கள் அமைப்பு தொடர்ந்து எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும், இக்கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய அமைப்பிற்கும், வெளிநாட்டிலுள்ள இளைஞர்களுக்கும்,  கல்விக் சமூகம் சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்பதோடு, கிராமபுற பாடசாலைகளை சமூகத்தின் உதவிகளுடன் மென்மேலும் வளர்ச்சியடையச் செய்யும், என இதன்போது வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: