16 Mar 2021

நீர்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு.

SHARE

நீர்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு.

இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களது "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக "நீர்பாசன செழுமை" தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (15) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களமும் வெல்லாவெளி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புது முன்மாரிச்சோலை அணைக்கட்டினை புனர்நிர்மாணம் செய்வதற்கான இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்திக் குழு தலைவருமாகிய சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் பா.சந்திரகுமார், பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி, உள்ளிட்ட அரச உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பாலையடி வட்டை கிராம பொதுமக்களது பிரசன்னத்திலும் புதுமுன்மாரிச்சோலை அனைக்கட்டின் புனர்நிர்மான ஆரம்ப நிகழ்வானதில் அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிதிகளினால் திட்டம் தொடர்பான பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிதிகளினால்  திட்டத்திற்கான கல் நடப்பட்டதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது  அதிதிகளின் விசேட உரைகளுடன் நிகழ்வானது நிறைவு பெற்றிருந்தது.


















SHARE

Author: verified_user

0 Comments: