9 Feb 2021

சுற்றுலா விடுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 25 பேருக்கு தலா 4000 அபராதம் 14பேருக்கு பிடியாணை.

SHARE

சுற்றுலா விடுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 25 பேருக்கு தலா 4000 அபராதம் 14பேருக்கு பிடியாணை.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில்  கொவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 39 பேரில் 25 பேருக்கு  தலா 4000  ரூபாய் வீதம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டதுடன் மேலும் 14 பேருக்கு  பிடியாணை பிறப்பிக்கப்புட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி மேற்படி சுற்றுலா விடுதியில் கொவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வை நடாத்தியவர்கள் மீது நீதிமன்ற அனுமதியின் பேரில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு மீதான விசாரணை திங்கட்கிழமை (9) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது 25 பேருக்கு தலா 4000 ரூபாய் அபராதம் விதித்துடன் மன்றில ஆஜராகத் தவறிய 14 பேருக்கும் பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: