10 Jan 2021

மழைவெள்ளத்தினால் களுதாவளை பகுதியில் உள்ளுர் வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிப்பு, தோட்டங்களுக்கும் சேதம்.

SHARE

மழைவெள்ளத்தினால் களுதாவளை பகுதியில் உள்ளுர் வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிப்பு, தோட்டங்களுக்கும் சேதம்.

கடந்த சில தினங்களாக பொய்துவரும் பலத்த மழைகாணரமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குபட்பட்ட தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டுநில விவசாயத்தில் ஈடுபட்டுள்ள களுதாவளை, தேத்தாதீவு, களுவாஞ்சிகுடி, மாங்காடு, போன்ற பல கிராமங்களிலும் வெள்ளநிலமை ஏற்பட்டுள்ளதோடு, பல வீடுகளுக்குள்ளும், வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

கிராமங்களிலுள்ள பெரும்பாலான உள்வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதனால் மக்களின் உள்ளுர் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக கிராம மக்களம கவலை தெரிவிக்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச சொந்தமான, இக்கிராமங்களில் அமைந்துள்ள வீதிகளை இதுவரையில் முறையாக செப்பனிடாமையும், முறையான வடிகானமைப்பு வசதிகள் அமைக்காமை, நீர் வழிந்தோடும், தோணாக்களை சிலர் அடைத்து வைத்துள்ளமை, போன்ற பல காணரங்களிளால் இவ்வாறு மழை வெள்ளம் தேங்கி நிற்கின்றது.

இவ்வாறு மழை நீர் தேங்கி நிற்பதனால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும். சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் அங்கலாய்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க வெற்றிலை, மிளகாய், கத்தரி, பயற்றை, வெங்காயம், உள்ளிட்ட பல மேட்டுநிலப் பயிற் செய்கைக்குப் பெயர்போன களுதாவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேட்டுநிலப் பயிரினங்களும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு மழைநீர் தேங்கி நிற்பதனால் தமது பயிர்கள் மேலும் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் நீரை வெட்டி விடுவதற்கும், இனிமேலாவது வீதிகளைப் புணரமைப்புச் செய்து. முறையான வடிகானமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.






































SHARE

Author: verified_user

0 Comments: