7 Jan 2021

100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரீசோதனையில் எவருக்கும் தொற்றில்லை.

SHARE

100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட்  அன்டிஜன் பரீசோதனையில் எவருக்கும் தொற்றில்லை.

மட்டக்களபில் புதன்கிழமை (06)  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  முன்னெடுக்கப்பட்ட ரபிட்  அன்டிஜன் டெஸ்ட்  மூலமான  பரிசோதனையில்  எவருக்கும்  கொரோனா வைரஸ் தொற்று  இல்லை என  மட்டக்களப்பு  பொதுசுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக  வைத்தியர்  கிரிசுதன்   தெரிவித்துள்ளார்

இலங்கை பொலிஸ்  திணைக்களத்தின்  மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம்   மற்றும் மட்டக்களப்பு  சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர்  காரியாலயத்தில்  கடமையாற்றுகின்ற  100 பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கு  ரபிட் அன்டிஜன் டெஸ்ட்   மூலமான பரிசோதனைகள்   முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு  பொதுசுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக  வைத்தியர்  கிரிசுதன்   தலைமையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல்  விசேட  வைத்திய நிபுணர்  வைத்தியர் வைதேகி  ரஜீவன் பிரான்சிஸ் மற்றும்   வைத்தியசாலை ஆய்வு கூட  தொழில்  நுட்பவியலாளர்களுடன்  மட்டக்களப்பு  பொதுசுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக   பொதுசுகாதார பரிசோதகர்களினால்  ரபிட் அன்டிஜன் டெஸ்ட்  மூலமான பரிசோதனைகள் இன்று   முன்னெடுக்கப்பட்டன .

ரபிட்  அன்டிஜன் டெஸ்ட் மூலம்   100 பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கு  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு  பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கும்   கொரோனா வைரஸ் தொற்று  இல்லை என  மட்டக்களப்பு  பொதுசுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக  வைத்தியர்  கிரிசுதன்   தெரிவித்துள்ளார்.







SHARE

Author: verified_user

0 Comments: